கால் வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும்?

Advertisement

கால் வீக்கம் குறைய வீட்டு வைத்தியம்..!

இந்த கால் வீக்கத்திற்கு எடீமா என்று பெயர். இந்த கால் வீக்கமானது உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தேங்கும் போது ஏற்படுகிறது. இந்த வீக்கம் கால் பாதங்களில் மட்டும் தான் தோன்றும் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் அடிவயிறு அல்லது முகத்தில் கூட வீக்கம் ஏற்படலாம். இத்தகைய வீக்கங்கள் சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். அப்படி மறையாமல் நெடுநாட்கள் வீக்கம் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது. சரி இந்த கால் வீக்கம் எதனால் வருகிறது மற்றும் கால் வீக்கம் குறைய வீட்டு வைத்தியம் சிலவற்றை இங்கு நாம் பார்க்கலாம்.

கால் வீக்கம் காரணம்:

கால் வீக்கம்

  1. ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் இந்த கால் வீக்கம் பிரச்சனை ஒருவருக்கு ஏற்படுகிறது.
  2. நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகள் காரணமாகவும் கால் வீக்கம் ஏற்படும்.
  3. உங்கள் உடலில் ஏதாவது ஆரோக்கிய பிரச்சனை இருந்தாலும் இந்த கால் வீக்கம் ஏற்படலாம். அதாவது இதய நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இந்த கால் வீக்கம் பிரச்சனை ஏற்படும்.
  4. சிறுநீரகத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் இந்த கால் பகுதியில் வீக்கம் ஏற்படும்.
  5. அதிகம் மது அருந்துபவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

தண்ணீர்:

நம் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருந்தால் உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்பட காரணமாக அமையும். ஆகவே நம் உடலில் திரவங்கள் தேங்குவதால் இந்த வீக்கங்கள் ஏற்படுகிறது என்றால், தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இவ்வாறு தண்ணீர் அருந்துவதால் உடலில் ஏற்படும் வீக்கங்கள் குறைய ஆரம்பிக்கும்.

Kaal Veekam Kuraiya – குளிர்ந்த நீர்:

பொதுவாக இந்த கால் வீக்கம் குறைய குளிர்ந்த நீரில் உங்கள் கால்களை சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். இவ்வாறு ஊறவைப்பதன் மூலம் கால் வீக்கங்கள் குறைய ஆரம்பிக்கும்.

கால்களை உயர்த்தி வைத்தல்:

கால் வீக்கம் குறைய சிறந்த சிகிச்சை முறை என்று இதனை சொல்லலாம். அதாவது உட்காரும் போதோ அல்லது படுக்கும் போதோ தங்கள் கால்களை உயர்த்தி வைக்கலாம். இவ்வாறு செய்யும் போது கால்களில் மீது எந்த சுமையும் வைக்கக் கூடாது. சுவற்றில் கால்களை வைத்து முதுகில் சாய்ந்துக்கொண்டும் இருக்கலாம். இப்படி செய்வதினால் கால் வீக்கம் குறைய ஆரம்பிக்கும்.

மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்:

பொதுவாக அதிகம் மது அருந்துபவர்களுக்கு கால் பகுதி வீங்கிக்கொள்ளும். மது உடலில் உள்ள நீரை வற்றச் செய்து வீக்கத்தை அதிகரிக்கும். மது அருந்துவதை நிறுத்தி இரண்டு நாட்கள் கடந்தும் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுகவும்.

குடிப்பழக்கத்தை நிறுத்த மருந்து

கல்லுப்பு:

கால் வீக்கம் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து காலை ஊறவைத்தால் வீக்கம் மற்றும் வலி குறையும்.

எலுமிச்சை ஜூஸ்:

உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மற்றும் மிகுதியான திரவங்களை வெளியேற்ற எலுமிச்சை ஜூஸ் பருகலாம். எலுமிச்சை ஜூஸை தினமும் குடிக்கலாம்.

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ..!

மக்னீசியம்:

உடலில் நீர் தேங்க மக்னீசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். எனவே, மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். டோஃபூ, கீரை, முந்திரி, பாதாம், டார்க் சாக்லேட், புரொக்கோலி மற்றும் அவகேடோ ஆகிய உணவுகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது.

உப்பை குறைக்கவும்:

இந்த கால் வீக்கம் பிரச்சனை உள்ளவர்கள் தங்களது உணவில் உப்பு குறைவாக எடுத்துக் கொண்டால் திரவம் தேங்குவதை குறைத்து, வீக்கத்தை குறைக்கலாம். மேலும் பாக்கெட் உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை முற்றிலும் தவிர்க்கவும்.

கால் மசாஜ்:

கால் வீக்கத்திற்கு நிவாரணம் தர மசாஜ் உதவும். தேங்கிய திரவத்தை அகலச் செய்து வீக்கத்தை குறைக்கும்.

பொட்டாசியம்:

உயர் ரத்த அழுத்தம் மற்றும் திரவம் தேங்க பொட்டாசியம் குறைபாடு காரணமாக இருக்கலாம். சக்கரைவள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், கோழிக்கறி ஆகிய உணவுகளில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement