கிராம்பு தீமைகள்
வணக்கம் பிரண்ட்ஸ்..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவல் அது என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அதை தெரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் உணவில் கிராம்பு சேர்த்து சமைப்பீர்களா..? இது என்ன கேள்வி, யார் தான் பிரியாணி போன்ற உணவுகளில் கிராம்பு சேர்த்து சமைக்காமல் இருப்பார்கள் சொல்லுங்கள் என்று கேட்பீர்கள்.
பொதுவாக கிராம்பில் பல்வேறு சத்துக்கள் இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் கிராம்பில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா
சரி இப்பொழுது கிராம்பில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொண்டு இருப்பீர்கள். ஆனால் அதில் இருக்கும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? என்னது கிராம்பில் தீமைகள் இருக்கா என்று வியந்து கேட்பீர்கள். ஆனால் கிராம்பில் தீமைகளும் இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
சீரகத்தை சமையலுக்கு சேர்க்கும் முன் அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்
கிராம்பில் இருக்கும் தீமைகள் என்ன..?
பொதுவாக நாம் எந்த உணவு பொருளாக இருந்தாலும் அதை அளவோடு தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டால் அமிர்தம் கூட நஞ்சாக மாறுகிறது. அப்போ மற்ற உணவுகளை நினைத்து பாருங்கள். அதுபோல தான் கிராம்பும். சரி கிராம்பில் இருக்கும் தீமைகளை இங்கு காணலாம்.
வயிற்றில் நச்சு தன்மையை உருவாக்கும் : கிராம்பை நாம் அதிகளவு உணவில் சேர்த்து பயன்படுத்துவது வயிற்றில் நச்சு தன்மையை உண்டாக்குகிறது. இதனால் வயிற்றில் புண், எரிச்சல், வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் வாயில் எரிச்சல் மற்றும் கொப்பளங்கள் வர காரணமாகிறது.
உணவில் அளவுக்கு அதிகமாக மிளகு சேர்த்து கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா |
நீரிழிவு நோயாளிகள் : பொதுவாக கிராம்பில் இரத்த சர்க்கரையின் அளவை பாதிக்கும் ரசாயன பொருட்கள் கிராம்பில் அதிகளவில் காணப்படுகின்றன. அதன் காரணமாக கிராம்பு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க செய்கிறது. அதனால் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கிராம்பை உணவில் அதிகமாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் : பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் உணவில் கிராம்பு அதிகமாக சேர்த்து கொள்ள கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
சரும நோய்கள் : கிராம்பை நாம் அதிகமாக உட்கொள்வதால் சருமத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனால் கிராம்பை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கடுகை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த கூடாது ஏன்னு தெரியுமா
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Health Tips In Tamil |