இந்த மாதிரி குப்புற படுத்து தூங்குவது நன்மையா தீமையா?

Advertisement

தூங்கும் நிலை

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் எப்படி தூங்கினால்  நன்மை தீமை என்று நிறைய கேள்விகள் உள்ளது. வீட்டில் தூங்கும் போது இப்படி தூங்காதே அப்படி தூக்காதே என்று தூங்கும் போதும் கூட நிறைய கட்டமைப்புகளை சொல்வார்கள். இப்படி சொல்லும் போது நமக்கு தோன்றுவது தூங்குவதில் என்னடா இருக்குது நல்லது கெட்டது தூங்க விடுங்களே என்று மனதில் தோன்றும். சிலருக்கு ஒரே மாதிரி தூங்குவது பிடிக்கும். சிலருக்கு பல கோணங்களில் தூங்குவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். அதேபோல் தான் சில விதமாக தூங்குவது நல்லது சில மாதிரி தூங்குவது கெட்டது என சொல்கிறார்கள் வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்வோம்.!

தூங்கும் நிலை:

தூங்கும் நிலை

ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று. அதேபோல் தூங்காமலும் இருக்கக் கூடாது,  நீண்ட நாட்களாக தூங்காமல் இருந்தால் அது அவனுடைய உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். வாங்க குப்பறபடுத்து தூங்கினால் ஏற்படும் விளைவுகளை பார்ப்போம்.

நெஞ்சு வலி காரணங்கள்:

தூங்கும் நிலை

சில பெண்கள் தூங்கும் போது குப்புற படுத்து தூங்குவார்கள்.அப்படி தூங்குவதால் மார்பகம் அழுத்தப்படும்  அதனால் வலி ஏற்படும். அப்படி வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி என்ன பிரச்சனை என்று தெரிந்துகொள்ளுங்கள். அதேபோல் குப்பறபடுத்து தூங்கும் பழக்கத்தை விடுங்கள்.

முகத்தில் சுருக்கம் வர காரணம்:

முகத்தில் சுருக்கம்

 

குப்புற படுத்து தூங்கினால் முகத்தின் அழகையும் சிலவகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். நிபுணர்களின் ஆய்வுகள் படி முகத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை பெற முடியாமல் போவதால் முகத்தில் தோள் சுருங்க தொடங்குகிறது. படுக்கை அறையில் உள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகள் முகத்தில் பருக்கள் வர காரணமாக இருக்கிறது.

செரிமான பிரச்சனை அறிகுறிகள்:

செரிமான பிரச்சனை அறிகுறிகள்

பெண்களை விட ஆண்கள் அதிகம் குப்புற படுத்தும் பழக்கத்தை கொண்டவராக  இருப்பார்கள். அப்படி தூங்கினால் செரிமான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆகவே அப்படி தூங்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

முதுகு வலி காரணங்கள்:

முதுகு வலி காரணங்கள்

குப்புற படுத்து தூங்கினால் நீண்ட நாட்களாக முதுகுவலியை ஏற்படும். அதேபோல் இரவு முழுவதும் குப்புற படுத்து தூங்கினால் முதுகிற்கு அழுத்தம் கொடுக்கும். அதனால் முதுகுவலி ஏற்படும்.

சுவாச பிரச்சனை:

இப்படி தூங்கினால் இரவு முழுவதும் ஒரே பக்கமாக கழுத்து இருக்கும் இதனால் சுவாசிக்க பிரச்சனை வரக்கூடும். கழுத்து சுளுக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது இதனால் கழுத்து வலி ஏற்படும்.

🤔  👉 தூங்கும் போது எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும் தெரியுமா?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement