Advertisement
கொத்தமல்லி மருத்துவ பயன்கள் | Koththamalli Payangal
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு ஆரோக்கியம் பகுதியில் நாம் பார்க்க போகிறது கொத்தமல்லி விதையின் நன்மைகள். இன்று சிலருக்கு கொத்தமல்லி என்பது காரத்திற்கு மட்டும் உதவும் பொருள் என்பது பலருடைய கருத்து. இதனுடைய தனித்துவம் காரக்குழம்பில் கமகமக்கும் மனம் சொல்லும். அம்மா வைக்கும் குழம்பில் இதன் சுவையில்லாமல் இருக்காது. ஆனால் இதில் சுவைமட்டும் இல்லாமல் உணவே மருந்து என்பதற்கு ஏற்றவாறு நாம் உடலுக்கு தேவையான மருத்துவத்தை தருகிறது. அதனை பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போபம்.
மல்லி விதையின் பயன்கள்:
- மல்லி விதையின் தண்ணிர் குடிப்பதால் நம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் மல்லி விதையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன் என அதிகமான சத்துகள் நிறைந்துள்ளது.
சப்ஜா விதை தீமைகள் |
- மல்லி விதையை இரவே ஊற வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி குடிப்பதால் நம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கிறது. அதில் முதலாவதாக இரத்தத்தின் சர்க்கரை அளவை பராமரிக்கவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைக்கவும், செரிமான பிரச்சனை தீரவும் வழி செய்கிறது.
கொத்தமல்லி டீ பயன்கள்:
- தினமும் காலையில் மல்லி டி குடிப்பதால் நம் உடலில் உள்ள மூட்டு, எலும்பை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் எழும்பை உறுதியாக வைக்க இது உதவுகிறது.
கொத்தமல்லி ஜூஸ் பயன்கள்:
உடல் எடை குறைய சியா விதை எப்படி சாப்பிட வேண்டும்? |
- நம் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் பொருள்களில் மல்லி ஒரு முக்கியமான பொருள் ஆகும். இதனை தினமும் ஜூஸ் செய்து குடித்தால் நம் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு சத்து, இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் வாயு பிரச்சனையை தீர்க்கும். அதுமட்டுமல்லாமல் பசிக்கும் தன்மையை அதிகரிக்கும். பெண்கள் முகம் வரண்டு போகாமல், பூஞ்சையால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரப்பதை அதிகமாக்கும், இரத்தத்தை சுத்தம் செய்யும், இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. சிறுவர்களுக்கு கண் பார்வை தெளிவாக தெரிய வழி செய்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியம் |
Advertisement