சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆரோக்கியம் பதிவில் சீரகம் சாப்பிடுவதாலும் சீரக தண்ணீர் அதிகம் குடிப்பதாலும் உடலுக்கு ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றித் தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே நம் வீட்டில் அதிகமாக உபயோகிக்கும் சமையல் பொருட்களில் சீரகமும் ஒன்று. இவை சிலருக்கு உடல் எடையை குறைப்பதற்கும், செரிமான கோளாறு பிரச்சனைகளை சரிசெய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை சில பேருக்கு பல நன்மைகளை செய்து வந்தாலும், இதை அதிகமாக சாப்பிடும் ஒரு சிலருக்கு பல பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. மேலும் அவற்றை நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
தேங்காய் பால் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? |
சீரகம் தீமைகள்:
கல்லீரல் சிறுநீரக பாதிப்பு:
சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது அடிக்கடி ஏப்பம் வருவதற்கு காரணமாக உள்ளது. அதோடு மட்டுமின்றி சீரகத்தில் இருக்கும் எண்ணெய் சுலபமாக ஆவியாவதால் சிறுநீரகத்தையும், கல்லீரலையும் அதிகமாக பாதிக்க செய்கிறது.
நெஞ்சு எரிச்சல் பிரச்சனை:
சீரகத்தை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும் பொழுது நெஞ்சு எரிச்சலை உண்டாக்குவதற்கு காரணமாக உள்ளது. எனவே அசிடிட்டி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் சீரகத்தை கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது என்று சொல்லப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் சீரக தண்ணீர் குடிக்கலாமா:
சீரகத்தை கர்ப்பிணி பெண்கள் அதிகமாக எடுத்துக்கொள்வதால் கருச்சிதைவு ஏற்படுவதற்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் குறை பிரசவம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதை தினம் சாப்பிடுவதால் குமட்டல், வாந்தி , வயிற்று உப்புதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சர்க்கரை அளவை குறைக்க:
சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் அதிக சர்க்கரை இருக்கும் பொழுது சீரகத்தை சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்திக்கிறது. எனவே சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் சீரகத்தை சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது.
மாதவிடாய் பிரச்சனைகள்:
பெண்கள் மாதவிடாய் நேரங்களில் அதிகமாக சீரகத்தை சாப்பிடுவதால் இவை இரத்தப்போக்கை அதிகமாக ஏற்படுத்துவதற்கு காரணமாக உள்ளது. எனவே இது போன்ற நேரங்களில் சீரகத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
சீரகம் தண்ணீர் தீமைகள்:
“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்பது போல சீரகத் தண்ணீரை கொஞ்சமாக குடிப்பது தவறில்லை. இது உங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்று அதிகமாக குடித்து வரும் பொழுது வயிற்று பிரச்சனை, கருச்சிதைவு போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது, எனவே உடலில் உள்ள நோய்களுக்காக சீரகத்தை பயன்படுத்தவேண்டும் என்று நினைத்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Health Tips In Tamil |