ஜாதிக்காய் யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா.?

jathikai side effects in tamil

ஜாதிக்காய் தீமைகள்

வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆரோக்கிய பதிவில் ஜாதிக்காய் யாரெல்லாம் சாப்பிட கூடாது என்பது பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். பொதுவாகவே  நாம் எந்த ஒரு மருந்து பொருளையும் உபயோகிக்கும் பொழுது அதை பற்றி தெரிந்துகொள்வதே இல்லை, அதை உணவில் உபயோகப்படுத்தி வருகிறோம், அதேபோல் தான் இந்த ஜாதிக்காயை யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்றும் சொல்லப்பட்டுருக்கிறது, மேலும் அவற்றை பற்றி நம் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

திரிபலா சூரணம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா?

ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால்:

ஜாதிக்காய் ஆனது பல ஏராளமான மருத்துவ குறிப்புகளை கொண்டிருந்தாலும், அவற்றை அதிகம் உபயோப்படுத்துவதால் உடலில் பல மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது, அதாவது இந்த ஜாதிக்காயில் உள்ள மைரிஸ்டிரின் என்ற நச்சு   உள்ளதால் இவற்றை சாப்பிட்டு வரும் பொழுது ஒன்றும் தெரியாது, ஆனால் இதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது உடலில் பலவிதமான பாதிப்புகளையும்  ஏற்படுத்துவதற்கு வழி  செய்கிறது.

இதனை நாளுக்கு நாள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது அதிகமான வயிற்று வலி, இதய துடிப்பு அதிகரிப்பு, உடலில் நடுக்கம் போன்ற பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

ஜாதிக்காய் யாரெல்லாம் சாப்பிட கூடாது:

ஜாதிக்காயை கர்ப்பிணி பெண்களும், குழந்தைக்கு பாலூட்டும் பெண்களும்  காட்டாயம் அதிகமாக உபயோப்படுத்தக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் மட்டும் அல்ல, ஜாதிக்காயை யார் பயன்படுத்தினாலும் குறைவாக பயன்படுத்துவது நல்லது.

ஒரு சிலருக்கு ஜாதிக்காய் நல்ல மருத்துவ பயன்களையும், சிலருக்கு பக்கவிளைவுகளையும் தருவதால் ஜாதிக்காயை  உபயோகப்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம்.

வயிற்றில் புண், குடல் புண், தொண்டையில் புண்கள் உள்ளவர்கள் ஜாதிக்காயை கட்டாயமாக எடுத்துக்கொள்ள கூடாது. அதேபோல் அடிக்கடி தலை சுற்று உள்ளவர்கள் ஜாதிக்காய் சாப்பிட கூடாது.

அடுத்ததாக குறைந்த மற்றும் உயர்ந்த  மன அழுத்தத்தை உடையவர்கள் ஜாதிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும், எனவே ஜாதிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

அளவுக்கு அதிகமான பித்தநோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாது, அதாவது பித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை எழுந்ததுமே மஞ்சள் நிறத்தில் வாந்தி எடுப்பார்கள், இவர்கள் காட்டாயம் ஜாதிக்காய் சாப்பிட கூடாது.

ஜாதிக்காயை அதிகம் படபடப்பு உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட கூடாது, அதேபோல் பெருநோய் உள்ளவர்கள், மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், வயிற்றில் வலி உள்ளவர்கள், அடிக்கடி மலம் கழிப்பவர்கள் சாப்பிட கூடாது.

உடலில் உஷ்ணம், உடலில் எரிச்சல், புண் உள்ளவர்கள் சாப்பிட கூடாது. அதாவது உடலில் புண்கள் இருக்கும் நேரங்களில் ஜாதிகாயை உபயோகப்படுத்த கூடாது.

இந்த ஜாதிக்கையினை திருமணம் ஆகாத ஆண், பெண் சாப்பிட கூடாது, இதனை கல்யாணம் ஆகாதவர்கள் சாப்பிட்டால் காமத்தை ஏற்படுத்தும் எனவே கல்யாண ஆகாதவர்கள் கட்டாயம் இதை தவிர்ப்பது நல்லது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்