டைபாய்டு காய்ச்சல் உணவு | Typhoid Fever Food Chart in Tamil

Advertisement

டைபாய்டு காய்ச்சல் உணவு முறை | Diet For Typhoid Patient in Tamil

உடலில் இருக்கும் இயல்பான வெப்ப நிலையில் இருந்து மாறுபட்டு உடலின் வெப்பநிலை 98.4° அல்லது அதற்கு மேல் உயரும் போது காய்ச்சல் ஏற்படுகிறது. சாதராண வைரஸ் காய்ச்சல் குறைந்தபட்சம் மூன்று அல்லது ஒரு வாரம் நீடிக்கும். அதற்கு மேல் நீடிக்கும் எந்த காய்ச்சல்களாக இருந்தால் டைபாய்டு காய்ச்சலாக இருககுமோ என்ற பயம் ஏற்படும். அந்த வகையில் நாம் இந்த பதிவில் டைபாய்டு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது, அதற்கான அறிகுறிகள் மற்றும் டைபாய்டு காய்ச்சல் வந்தால் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும், எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

டைபாய்டு காய்ச்சல் எதனால் வருகிறது?

  • இந்த நோய் சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியா மூலம் பரவுகிறது. இந்த பாக்டீரியா குடலில் உள்ள திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஏற்படுகிறது.
  • அசுத்தமான தண்ணீரை பருகுவதாலும், அசுத்தமான உணவுகளை சாப்பிடுவதும் தான் இந்த நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

டைபாய்டு காய்ச்சல் அறிகுறிகள்:

  • சாதாரண காய்ச்சலை விட இந்த காய்ச்சல் ஒரு மாதத்திற்கு மேலாக இருக்கும்.
  • உடல் மிகவும் சோர்ந்து காணப்படும்.
  • தலைவலி, வயிற்று வலி, வயிற்று போக்கு, உடல் எடை குறைவது, வாந்தி, குமட்டல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், பசியின்மை போன்றவை டைபாய்டு காய்ச்சல் அறிகுறிகளாகும்.
  • இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கல்லீரல், மண்ணீரல் சம்மந்தமான பிரச்சனைகள் அதிகரிக்கும்.

Typhoid Fever Food Chart in Tamil

டைபாய்டு காய்ச்சல் உணவு – Food For Typhoid in Tamil:

typhoid fever food in tamil

இந்த காய்ச்சல் உள்ள போது எளிதில் செரிமானம் அடையக்கூடிய உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். உடலில் ஊட்டச்த்துக்களை அதிகரிப்பதற்காக வாழைப்பழம், பெஸ்டோ, எலுமிச்சை, ஆப்பிள், கொய்யா போன்ற பழவகைகளை சாப்பிட வேண்டும்.

திரவ உணவு – Typhoid Food To Eat in Tamil – Typhoid Fever Food Chart in Tamil

food for typhoid in tamil

  • டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் திட உணவை சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும் ஆதலால் கஞ்சி, பழச்சாறு போன்ற திரவ உணவுகளை சாப்பிடுவது நல்லது.

Typhoid Fever Food in Tamil – மிளகு – டைபாய்டு உணவு முறை:

typhoid food diet in tamil

  • இந்த காய்ச்சல் உள்ளவர்கள் அதிக காரம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. உணவில் காரம் இல்லாமல் சாப்பிட முடியாதவர்கள் சிறிது மிளகு சேர்த்து சாப்பிடலாம். மேலும் மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம் உணவு சீக்கிரம் செரிமானம் அடைவதற்கு உதவுகிறது.

வைட்டமின் சி சத்தை அதிகரிக்கும் பால் – Typhoid Food To Eat in Tamil:

டைபாய்டு காய்ச்சல் உணவு

  • பால் சம்மந்தமான உணவுகளை சாப்பிடலாம். பாலில் வைட்டமின் சி சத்து அதிக அளவு உள்ளதால் உடலுக்கு தேவையான வலிமையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.
வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க இதை சாப்பிடுங்க

கிராம்பு – Typhoid Food Diet in Tamil – டைபாய்டு காய்ச்சல் உணவு முறை:

typhoid fever food chart in tamil

  • டைபாய்டு காய்ச்சல் ஏற்படுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். உணவில் கிராம்பை சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயிலிருந்து விடுபட உதவுகிறது.

டைபாய்டு காய்ச்சல் உணவு முறை – துளசி:

typhoid food to eat in tamil

  • ஆயுர்வேத மருத்துவ முறையில் துளசி ஒரு சிறந்த மருந்து பொருளாக கருதப்படுகிறது. எனவே டைபாய்டு காய்ச்சல் உள்ளவர்கள் தண்ணீரில் துளசி இலையுடன் மிளகு சேர்த்து அதை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது.

ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவு – டைபாய்டு காய்ச்சல் சாப்பாடு:

typhoid fever food in tamil

  • நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்து கொள்வது நல்லது. நிலவேம்பு கஷாயம் போன்றவற்றை குடிப்பதன் மூலம் டைபாய்டு காய்ச்சல் எளிதில் குணமடையும்.
  • தானியங்கள், காய்கறி சாறுகள், குளுக்கோஸ் நிறைந்த பழச்சாறுகள், பருப்பு, சத்துமாவு, புழுங்கல் அரிசி கஞ்சி போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
  • கீரை சூப், கோழி சூப், கேரட் சூப், காளான் சூப், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு சக்தி கிடைக்கிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

  • அதிக கொழுப்பு நிறைந்த உணவு, நார்ச்சத்து மிக்க உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • வெங்காயம், பூண்டு, முட்டைக்கோஸ், கேப்சிகம் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • வெண்ணெய், நெய், மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்த உணவுகளை உட்கொள்ள கூடாது.
  • அதிக எண்ணெய் நிறைந்த உணவுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Typhoid Fever Food Chart in Tamil:

டைபாய்டு காய்ச்சல் உணவு
காலை  இட்லி / பொங்கல்/ இடியாப்பம் / எலுமிச்சம் பழம் பானம், தோசை (எண்ணெய் குறைவாக பயன்படுத்த வேண்டும்)
மதியம்  சாதம் (குழைக்கப்பட்டது)/ காய்கறி சூப், வாழைப்பழம் / பாசிப்பயிறு சேர்த்த சாம்பார் / மீன் குழம்பு
மாலை  முட்டை (அவித்தது) / கிழங்கு வகைகள்/ வாழைப்பழம்/ பால் 
இரவு  கஞ்சி சாதம் / முட்டை / இடியாப்பம் / வேகவைத்த பருப்பு/ பால்
  • இது போன்ற புரதம், கலோரிகள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை கொடுப்பதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது. மேலும் இவை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.
மஞ்சள் காமாலை குணமாக வீட்டு வைத்தியம்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement