நெல்லிக்காய் சாப்பிடுவதற்கு முன்பு இதை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்

nellikai side effects in tamil

நெல்லிக்காய் தீமைகள்

வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆரோக்கிய பதிவில் நெல்லிக்காய் யாரெல்லாம் சாப்பிட கூடாது என்றும் நெல்லிக்காவை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே இந்த நெல்லிக்காய் ஆனது பல மருத்தவ குணங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதோடு மட்டுமன்றி நெல்லிக்காய் சாப்பிடுவதால் முடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றும் முகத்தை அழகாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் இதனை அதிக அளவில் எடுத்து கொள்ளும் பொழுது ஒரு சிலர்க்கு பல பிரச்சனைகளை உண்டாகிறது அவை என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

வெந்தயம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா.?

நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

இந்த நெல்லிக்காயின் பழங்கள், பட்டைகள், இலைகள், வேர்கள் என அனைத்தும் பல மருத்துவர்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இதனை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் பொழுது உடலுக்கு சில பக்கவிளைவுகளை தருகிறது. மேலும் அவை என்னவென்று பார்க்கலாம்.

ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள், இதற்காக மாத்திரை எடுப்பவர்கள் நெல்லைகாய்யை பயன்படுத்துவது நல்லது அல்ல.

நெல்லிக்காயில் அதிகமான வைட்டமின் சி இருப்பதால் இரத்த குழாய் பாதைகளை அகலப்படுத்தி இரத்தம் சீராக போவதற்கு உதவியாக இருக்கிறது, ஒரு சிலர் இரத்தம் உரைத்தல் மாத்திரை சாப்பிடும் நபர்கள்  நெல்லிக்காயை சாப்பிடுவது நல்லது கிடையாது. இவர்கள் அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது இரத்த கசிவுகள் ஏற்படுவதற்கும் அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

நெல்லிக்காயில் அதிகமான நார்ச்சத்துக்கள் இருப்பதால் மலத்தை வெளியேறுவதற்கு துணை புரிந்தால் கூட, இவற்றை அதிக அளவில் சாப்பிட்டு வரும் பொழுது மலட்டு தன்மையை உண்டாகும் என்றும் சொல்லப்படுகிறது. நெல்லைக்காய் ஜூஸ் குடிப்பவர்கள் அதிகமாக தண்ணீர் எடுத்து கொள்வது நல்லது.

உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறுகள் இருப்பவர்கள் நெல்லிக்காயை ஊறுகாய் பண்ணி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதனை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் பொழுது சிறுநீரக தேக்கத்தை ஏற்படுத்தி, அதோடு உடலில் நீர்தேக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்றும் சொல்லப்படுகிறது.

நெல்லிக்கையானது அதிக அளவு குளிர்ச்சி தன்மைகளை கொண்டுள்ளது, எனவே இதனை சாப்பிடும் பொழுது சளி, இருமல், சுரம், தும்மல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும், முக்கியமாக வீசிங் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. சளி பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காய் சாப்பிடும் பொழுது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளிக்கு மருந்தாக மாறிகிவிடும்.

அதிக அளவில் நெல்லிக்காயை எடுத்துக்கொள்ளும் பொழுது சிறுநீரக பாதையில்சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதோடு சிறுநீர் கழிக்கும் பொழுது துறுநாற்றத்தையும் ஏற்படுத்தும்.

நெல்லிக்காய்களை அதிக அளவில் சாப்பிட்டு வரும்பொழுது குமட்டல், வாந்தி, தலைவலி, சருமம் சிவத்தல், வாய் சுற்றி வீக்கம், வயிற்று வலி, அரிப்பு  போன்ற பக்கவிளைவுகளையும்  ஏற்படுத்தும். அதோடு சருமத்தை வறண்டு போவதற்கும் காரணமாக உள்ளது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips tamil