பச்சை கற்பூரம் பயன்கள் | Pachai Karpooram Uses in Tamil

pachai karpooram payangal

பச்சை கற்பூரம் பயன்கள் | Pachai Karpooram Uses in Tamil

Pachai Karpooram: ஹலோ அன்பர்களே இன்றைய பொதுநலம். காம் பதிவில் பச்சை கற்பூரத்தின் பயன்கள் பற்றி பார்க்கலாம். பச்சை கற்பூரம் மற்றும் லவங்க பட்டை ஒரே அறிவியல் குடும்பத்தை சார்ந்தது. இதனை ஆங்கிலத்தில் Cinnamon Camphor என்று கூறுவார்கள். நம் முன்னோர்கள் இந்த கற்பூரத்தை உணவில், ஆன்மிகத்தில், அழகு குறிப்புகளில் மற்றும் மருத்துவத்திலும் பயன்படுத்தி உள்ளனர். சரி வாங்க இந்த பச்சை கற்பூரத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Pachai Karpooram Uses Food in Tamil:

pachai karpooram payangal

  • பச்சை கற்பூரத்தை உணவில் பயன்படுத்துவதால் சாப்பாடு சீக்கிரம் கெடுவதற்கு காரணமான Fungus ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது.  இப்பொழுது நாம் உணவு கெடாமல் இருப்பதற்காக Refrigerator பயன்படுத்துகிறோம். ஆனால் முன்பு இந்த கற்பூரத்தை பயன்படுத்தி உள்ளனர்.
  • உணவில் இருக்கும் நோய் தொற்று ஏற்படாமலும் மற்றும் சாப்பாட்டில் சுவையை அதிகரிக்கவும், கிருமிகள் எதுவும் அண்டாமல் இருப்பதற்கும் இந்த பச்சை கற்பூரம் பயன்பட்டு வருகிறது.

பச்சை கற்பூரத்தின் மருத்துவ பயன்கள்:

  • கோயில்களில் கொடுக்கும் பிரசாதம் மற்றும் தீர்த்தத்தில் பச்சை கற்பூரம் மற்றும் கிராம்பு சேர்த்து தருவார்கள். எதற்காக என்றால் மருந்தாகவும் மற்றும் சுவை அதிகரிக்கவும் மற்றும் கடவுளின் ஆசி மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த முறையாகும்.
  • பச்சை கற்பூரத்தை தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் சளித்தொல்லை, சுவாச கோளாறு, சைனஸ், அலர்ஜி மற்றும் நோய் தோற்று ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது.

பச்சை கற்பூரத்தின் மருத்துவ பயன்கள் – Green Camphor Uses in Tamil:

pachai karpooram uses in tamil

  • இரவு ஒரு செம்பு (copper) அல்லது மண் பாத்திரத்தில் இரவு படுக்கைக்கு முன்பு தண்ணீர் ஊற்றி அதில் துளசி, கிராம்பு, பச்சை கற்பூரம் மற்றும் தேன் கலந்து மறு நாள் காலை குடித்து வந்தால் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். மேலும் இந்த தண்ணீரை பேச்சு வராத குழந்தைகள் குடித்து வந்தால் பேச ஆரம்பிப்பார்கள்.
  • இந்த கற்பூரத்தை Cream-ஆக பாதத்தில் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

பச்சை கற்பூரம் பயன்கள் – செல்வம் செழிக்க உதவும் பச்சை கற்பூரம்:

pachai karpooram uses in tamil

  •  பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் குணம் உள்ளது. இந்த கற்பூரத்துடன் சோம்பு, கிராம்பு, மஞ்சள், பச்சை கற்பூரம், கருமஞ்சள், சிறிய தேங்காய், குணுகு, கோரோசனை, ஜவ்வாது, குன்றின் மணி, கோமதி சக்கரம், சோலி மற்றும் சிறிய தர்பை துண்டு அனைத்தையும் ஒரு பாத்திரம் அல்லது துணியில் கட்டி பூஜை அறை மற்றும் காசோலை ஆகிய இடத்தில் வைத்து வந்தால் பண புழக்கம் அதிகரிக்கும் மற்றும் வீண் செலவு ஏற்படாது.
  • இதை ஏன் செய்ய வேண்டும் என்றால் இதில் தன ஆகர்சனம் கிடைப்பதற்காகவும்,  மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்காகவும் மற்றும் பண வரவு அதிகரிக்கவும் வைக்க வேண்டும்.
  • பச்சை கற்பூரம் இயற்கையாகவே நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் என்பதற்காக திருப்பதியில் உள்ள பெருமாள் கோவிலில் சாமியின் தாடையில் இந்த கற்பூரத்தை வைத்திருப்பார்கள்.
  • வீட்டில் உள்ள கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் போன்றவை விலகுவதற்கும் இந்த பச்சை கற்பூரம் பயன்பட்டு வருகிறது. பச்சை கற்பூரம் நல்ல வாசனை உள்ளது வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடியேறுவாள். அதனால் தான் இந்த கற்பூரத்தை பயன்படுத்துவதால் செல்வம் செழிக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்