பதற்றம் அறிகுறிகள் | Stress Symptoms in Tamil

Advertisement

பதற்றம் குறைய | Pathattam Kuraya

ஒரு சிலர் எப்போதும் பதற்றமாகவே இருப்பார்கள். பதற்றம் என்பது நம் வாழ்வில் ஏற்படக்கூடிய மன அழுத்தம், சூழ்நிலை மாறுபாட்டினால் ஏற்படக்கூடியது தான் இந்த பதற்றம். பதற்றமானது நாம் புதிதாக ஒரு செயலை அதிக முயற்சியுடன் மேற்கொள்ளும்போது நம்மிடம் அதிக பதற்றம் காணப்படும். படிக்கும் மாணவர்களுக்கு தேர்வறையில் பதற்றம், படித்து முடித்துவிட்டு புதிதாக வேலைக்கு செல்பவர்களிடம் இந்த பதற்றம் மிகுந்து காணப்படும். பல நாட்களாக மனதில் பதற்றம் இருந்தால் என்ன நோய் தாக்கம் ஏற்படும் மற்றும் பதற்றத்திற்கான அறிகுறிகளை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

அல்சர் நோயின் அறிகுறிகள்

பதற்ற நோயின் முன் தாக்கம்:

பல நாட்களாக மனதில் குழப்ப நிலை, மன அழுத்தம், எப்போதும் பதட்டம் இருந்துக்கொண்டே இருந்தால் உயர் இரத்த அழுத்தம், அதிக உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

பதற்றம் அதிகமாக இருப்பதற்கான முன் அறிகுறி:

  • தூக்கம் இல்லாத பிரச்சனை.
  • உடல் எப்போதும் சோர்வாக இருத்தல்.
  • மனதில் சோர்வு.
  • மிக குறைவாக அல்லது மிக அதிகமாக சாப்பிடுவது.
  • மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கவழக்கங்களில் ஈடுபடுதல்.
  • உங்களை ஒருமுகப்படுத்தி கொள்வதில் சிரமம் ஏற்படுதல்.
  • உடல் எடை குறைந்து போதல்.
  • உடலில் எடை அதிகரித்தல்.
  • இடைவிடாத தலைவலி.
  • தொடர்ந்து மனதில் கவலைப்படும் உணர்வு.
  • மலச்சிக்கல் / வயிற்றுப்போக்கு பிரச்சனை.
  • அதிர்ச்சி.
  • தசை வலி.
  • பய உணர்வு.
  • தலைசுற்றல்.

மேல் கூறிய அறிகுறிகள் அனைத்தும் பதற்றம் அதிகமாக இருப்பதன் அறிகுறியாகும்.

பதற்றம் அதிகமாக ஏற்படுவதற்கு முக்கிய காரணம்:

  • பதற்றம் அதிகமாக ஏற்படுவதற்கான முக்கிய காரணம் தோல்வி மனப்பான்மை.
  • நமது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் இழப்பு நமக்கு அதிக பதற்றத்தை ஏற்படுத்தும்.
  • அதிக மன அழுத்தத்தில் இருந்தால் எப்போதும் பதற்ற உணர்வு இருக்கலாம்.
  • குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, பணியிட பிரச்சனை போன்றவைகளால் அதிக பதற்றம் ஏற்படுகிறது.
  • வீட்டில் ஒரு குழந்தை உள்ளவர்களுக்கு அதிக பதற்றம் காணப்படுகிறது.
  • ஒரு சிலருக்கு வாழ்க்கை மாற்றத்தினால் கூட பதற்ற நிலை ஏற்படலாம்.
பித்தம் அறிகுறிகள்

பதற்றம் குறைய சிகிச்சை:

  • மனதை சரியான நிலையில் மேம்படுத்தவும், தசை இறுக்கத்தை குறைக்கவும் முறையான உடற்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
  • தியானம், யோகா மற்றும் ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள், மனதிற்கு ஓய்வு கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • இந்த சிகிச்சை மனதிலிருந்து எதிர்மறையான உணர்வுகள் மற்றும் எண்ணங்களை விலக்கி, ஒரு நபரை அமைதியாகவும் நேர்மறையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement