பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Beetroot Side Effects

ஹலோ நண்பர்களே..! இன்றைய ஆரோக்கியம் பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தெரிந்து கொள்ள போகிறோம் என்று யோசிப்பீர்கள். ஆனால் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று நாம் பீட்ரூட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். பொதுவாக பீட்ரூட்டில் பல ஆரோக்கியம் தரும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இது பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

இருந்தாலும் நாம் பீட்ரூட்டை அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டால் அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதனால் எவ்வளவு ஊட்டச்சத்து நிறைந்த பொருளாக இருந்தாலும் அதை நாம் அளவோடு தான் உட்கொள்ள வேண்டும். அதை தான் நம் முன்னோர்கள் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று சொன்னார்கள். சரி வாங்க நண்பர்களே பீட்ரூட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்வோம்.

பீட்ரூட் ஜூஸின் பயன்கள்..!

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

சிறுநீரக கற்களை உருவாக்குகிறது: 

சிறுநீரக கற்களை உருவாக்குகிறது

பீட்ரூட்டில் ஆக்சலேட்டுகள் அதிகமாக காணப்படுகின்றன. இதன் காரணமாக நாம் அதிகமாக பீட்ரூட் எடுத்து கொள்வதால் சிறுநீரக கற்களை உருவாக்க வழிவகுக்கிறது. அதுபோல பீட்ரூட் அதிகமாக சாப்பிடுவதால் சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு படை நோய், அரிப்பு மற்றும் குளிர், காய்ச்சல் மற்றும் தடிப்பு போன்ற ஒவ்வாமைகளை ஏற்படுத்துகிறது.

இதை அதிகமாக உட்கொள்வது சிலருக்கு பீட்டூரியாவை ஏற்படுத்துகிறது. மேலும் இதனால் சிறுநீர் இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றும் ஒரு நிலை ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது.

பீட்ரூட் ஜூஸ் அதிகம் குடிக்கிறீங்களா..? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!

வயிற்றில் புண் ஏற்படுகிறது:

வயிற்றில் புண் ஏற்படுகிறது

பீட்ரூட் செரிமான அமைப்பிற்கு சிறந்ததாக இருந்தாலும் அதை அதிகமாக உட்கொள்ளும் போது அது சிலருக்கு செரிமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது. பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானப் பாதையை அழிக்க உதவுவதன் காரணமாக லேசான வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதனால் வயிற்றில் புண் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடலாமா..? 

கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடலாமா

பீட்ரூட்டை கர்ப்ப காலத்தில் உணவில் சேர்த்து கொள்ளும் போது இரத்த அழுத்தம் குறைவது மற்றும் நைட்ரிக் ஆக்சைடு அதிகரிப்பு, மிகவும் குறைந்த இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் அல்லது சோர்வு போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.

அதனால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பீட்ரூட் எடுத்து கொள்ள வேண்டும்.

பீட்ரூட் ஜூஸ் தரும் நன்மைகள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil