Advertisement
மணத்தக்காளி கீரை பயன்கள் | Manathakkali Keerai Benefits in Tamil
கீரைகள் அனைத்திலும் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன, அதிலும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது என்று எல்லோருக்குமே தெரியும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அடிக்கடி உணவில் கீரையை சேர்த்து கொள்ள சொல்வார்கள். கீரையில் முருங்கை கீரை, பசலை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி கீரை, மூக்கிரட்டை கீரை என பல வகைகள் உள்ளது. இந்த பதிவில் மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
காய்ச்சலை சரி செய்ய:
- மணத்தக்காளி கீரை பயன்கள்: காய்ச்சல் இருக்கும்பொழுது மணத்தக்காளி கீரையை சூப் செய்து சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்ப நிலையை குறைக்க உதவும். உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.
அல்சர்:
- Manathakkali Keerai Benefits in Tamil: வயிற்று புண், வாய் புண் உள்ளவர்கள் இந்த கீரையை உணவில் சேர்த்து கொண்டால் விரைவில் குணமடையும். ஒரு சிலருக்கு தீராத தலைவலி இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு மணத்தக்காளி கீரை மிகவும் சிறந்தது.
உடல் சூட்டை தணிக்க:
- மணத்தக்காளி கீரை சூப் பயன்கள்: கோடை காலத்தில் ஒரு சிலருக்கு உடலில் கட்டி காணப்படும், அந்த சூடு கட்டியை குணப்படுத்தவும் உதவும். உடல் சூட்டை தணிக்கவும், இரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.
தொப்பை குறைய:
- Manathakkali Keerai Health Benefits in Tamil: உடல் பருமனானவர்கள் தொப்பையை குறைக்க தினமும் மணத்தக்காளி கீரையை சூப் செய்து குடித்து வந்தால் உடம்பில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைவதற்கு உதவியாக இருக்கும்.
கல்லீரல் நோய்:
- Manathakkali Keerai Benefits in Tamil: மணத்தக்காளி கீரையை போன்று அதில் இருக்கும் பழமும் உடலுக்கு நன்மையை கொடுக்க கூடியது. கல்லீரல் நோய் உள்ளவர்கள், அடிக்கடி வாந்தி வருவது போன்றவற்றை குறைக்க மணத்தக்காளி பழத்தை சாப்பிட்டு வரலாம்.
சரும அழகை அதிகரிக்க:
- Manathakkali Keerai Soup Benefits in Tamil: சரும பராமரிப்பிற்கு ஒரு சிறந்த பொருள் இந்த கீரையில் இருக்க கூடிய பழம். முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கும், சருமத்தில் இருக்கும் வெண்புள்ளிகளை சரி செய்யவும் உதவும்.
இதயத்தை பாதுகாக்க:
- மணத்தக்காளி கீரை பயன்கள்: இதய துடிப்பை சீராக பார்த்துக்கொள்வதற்கும், இதய நோய்களை சரி செய்யவும் உதவுகிறது. உடலை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளவும் மணத்தக்காளி கீரை மிகவும் உதவும்.
தூக்கமின்மை சரி செய்ய:
- Manathakkali Keerai Benefits in Tamil: தூக்கமின்மை உள்ளவர்கள் இந்த கீரையின் விதைகளை காய வைத்து பொடியாக்கி, அந்த பொடியை பாலில் கலந்து குடித்து வரலாம்.
- மாலை கண் நோயை சரி செய்யவும், கண் பார்வை திறன் அதிகரிக்கவும் உதவும்.
மலச்சிக்கல்:
- மணத்தக்காளி கீரை பயன்கள்: செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் மணத்தக்காளி கீரையை சேர்த்து கொள்வது நல்லது.
- இந்த கீரையை சூப் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
உணவு:
- Manathakkali Keerai Benefits in Tamil: இந்த கீரையை நீங்கள் கூட்டு, பொரியல், சூப், குழம்பு, சட்னி போன்று செய்து சாப்பிடலாம்.
- வயிற்று புண் உள்ளவர்கள் பெரும்பாலும் இந்த கீரையின் பழம் மற்றும் சூப் குடிப்பது நல்லது. மணத்தக்காளி கீரையுடன் தேங்காய்ப்பால் சேர்த்து கொள்வது நல்லது.
தீமைகள்:
- இதில் இருக்கும் மணத்தக்காளி கீரை மற்றும் பழம் உடலுக்கு நன்மைகளை தரக்கூடியது, ஆனால் இதில் உள்ள காய் தேகத்திற்கு தீமைகளை தரக்கூடியது.
- மணத்தக்காளி காயை சாப்பிட்டால் வாந்தி, இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்கும், பக்க வாதம் போன்ற நோய்கள் ஏற்படலாம். ஆதலால் இந்த கீரையில் உள்ள காயை உணவில் சேர்த்து கொள்ளவேண்டாம்.
முடக்கத்தான் கீரை பயன்கள் |
வெந்தய கீரை நன்மைகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியம் |
Advertisement