மாசிக்காய் பயன்கள் | Masikai Benefits in Tamil

Masikai Uses Tamil

மாசிக்காய் மருத்துவ பயன்கள் | Masikai Uses Tamil

இந்தியாவில் அதிகமான மூலிகை மருந்துகள் கொட்டி கிடக்கின்றன. இதில் நாம் எத்தனையோ வகையான மூலிகைகளை பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மருந்துகளும் உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த பெரிதளவில் உதவி வருகிறது. அந்த வகையில் பல விதமான மருத்துவ குணங்களை கொண்ட பொருள் தான் மாசிக்காய். சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்று. நாம் இந்த பதிவில் மாசிக்காயில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை படித்தறியலாம் வாங்க.

மாசிக்காய் Botanical Name:

Quercus Incana என்பது இதன் தாவரவியல் பெயராகும்.

வாய்ப்புண்:

மாசிக்காய் பயன்கள்

 • Masikai Uses in Tamil: காரம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது நம்மில் பலருக்கும் வாய்ப்புண் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் அரை டேபிள் ஸ்பூன் மாசிக்காய் பொடியை வெந்நீரில் கலந்து வாய்கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் மற்றும் வாய்ப்புண் சரியாகும்.
 • மேலும் ஈறுகள் பலம் பெறுவதற்கும், ஈறுகளில் கசியும் இரத்தத்தை சரி செய்யவும், பற்சொத்தையை சரி செய்யவும் உதவியாக இருக்கும்.

மாதவிடாய் காலத்தில்:

Masikai Benefits in Tamil

 • மாசிக்காய் பயன்கள்: பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக உதிர போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் ஏற்படும். அதனை சரி செய்ய தினமும் மாசிக்காய் எடுத்து கொள்வது நல்லது.
 • அதிக இரத்தப்போக்கை நிறுத்த, மாசிக்காயை தேனில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரலாம். மேலும் இது கருப்பை வலுப்பெறுவதற்கும் உதவியாக இருக்கும்.

குழந்தைகளுக்கு:

Masikai Benefits in Tamil

 • Masikai Benefits in Tamil: பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், பேதி, வயிறு உப்புதல் போன்றவற்றை சரி செய்ய மாசிக்காய் உரை மருந்தாக பெரியவர்கள் கொடுப்பார்கள்.
 • பால் கொடுக்கும் பெண்கள் மாசிக்காயை பொடியாக செய்து வெந்நீர் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு வயிற்று பொருமல், செரிமான கோளாறுகள் போன்றவற்றை சரி செய்து குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவியாக இருக்கும்.
பிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி?

தோல் நோய்கள்:

Masikai Benefits in Tamil

 • Masikai Uses Tamil: சொறி சிரங்கு, படை, தேமல் உள்ளவர்கள் மாசிக்காய் பொடியை நீரில் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து அதனை தொற்று உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
 • மூல நோயால் ஒரு சிலருக்கு கட்டிகள், காயங்கள், புண்கள் ஏற்படும். அதனை சரி செய்யவும் மாசிக்காய் பொடியை நீரில் சேர்த்து ஒரு பேஸ்ட் போல செய்து புண் உள்ள இடத்தில் தடவி வரலாம்.

வயிற்று போக்கு:

மாசிக்காய் மருத்துவ பயன்கள்

 • மாசிக்காய் பயன்கள்: நம்முடைய உணவு முறை காரணமாக ஒரு சிலருக்கு வயிற்று போக்கு ஏற்படலாம், அதனை சரி செய்ய 1 டேபிள் ஸ்பூன் மாசிக்காய் பொடியை, தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

சளி பிரச்சனைக்கு:

masikai uses tamil

 • Masikai Benefits in Tamil: குளிர்காலத்தில் அல்லது மழைக்காலத்தில் இருமல், ஜலதோஷம், தொண்டை வலி, தொண்டை கட்டு போன்றவை ஏற்படும்.
 • தீராத இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் கற்பூரவள்ளி இலைச்சாறுடன், மாசிக்காய் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

படபடப்பு நீங்க:

masikai uses in tamil

 • மாசிக்காய் பயன்கள்: ஒரு சிலருக்கு மனதில் கவலை மற்றும் பயம் இருந்தால் அதிக படபடப்பு ஏற்படும்.
 • படபடப்பு நீங்குவதற்கு மாசிக்காய் பொடியை பாலில் கலந்து நாக்கில் தடவி வரலாம்.

பருக்கள் நீங்க:

masikai uses in tamil

 • மாசிக்காய் அழகு குறிப்புகள்: கோடை காலத்தில் அதிக உஷ்ணம் காரணமாக முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்து விடும். ஒரு சிலருக்கு எண்ணெய் சருமம் அல்லது ஜீன் காரணமாக சருமத்தில் பருக்கள் இருக்கும்.
 • முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்க இரவு நேரத்தில் முகத்தில் அரை டேபிள் ஸ்பூன் ஜாதிக்காய் பொடி, அரை டேபிள் ஸ்பூன் மாசிக்காய் பொடியை நீரில் கலந்து முகத்தில் தடவி கொள்ளவும்.
 • பின் அதை காலையில் கழுவி விடலாம். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
ஜாதிக்காய் பயன்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்