மூச்சு திணறல் அறிகுறிகள் | Shortness Of Breath Symptoms in Tamil

மூச்சு திணறல் காரணம் | Muchi Thinaral Symptoms in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று இந்த பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் தான். எல்லா மனிதர்களும் மூச்சியை சுவாசித்து வாழ்கிறார்கள். அப்படி சுவாசிப்பதில் பல பிரச்சனைகள் மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. பல மனிதர்களுக்கு மூச்சு திணறல் வருகிறது. இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூச்சி திணறல் பிரச்சனைகள் வருகிறது. அப்படி ஏன் இந்த நோய் வருகிறது. இந்த மூச்சு திணறல் பிரச்சனை வருவதற்கான அறிகுறிகள் என்ன? என்பதை பற்றி பார்க்க போகிறோம்.

நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள்

மூச்சு திணறல் அறிகுறிகள்:

 • சில மனிதர்களுக்கு பல விதமான விசயங்கள் இருக்கிறது. அதில் ஒரு சிலர் காற்று அதிகமாக இருந்தால் மூச்சு விட முடியவில்லை என்று சொல்வார்கள். இன்னும் சிலர் அறையை சாத்திவிட்டு தூங்கினால் மூச்சு விட முடியாது என்று சொல்வார்கள்.
 • சிலர் ஏசி அறையில் இருந்தால் மூச்சு விட முடியாது என சொல்வார்கள் .அப்படி இருந்தால் அது அவரவர்கென்று எதிர்ப்பு சக்தி இருக்கிறது அதனால் இது போன்ற பிரச்சனைகள் வருகிறது.
 • மூச்சு விடுவதற்கு பெரிதும் உதவுவது நுரையீரல் தான் அப்படி நுரையீலில் பிரச்சனை இருந்தாலும் மூச்சி விடுவதற்கு கஷ்டப்படுவோம்.

மூச்சு திணறல் அறிகுறிகள்

 • மூச்சு விடும்பொழுதோ அல்லது சாதாரணமாக இருக்கும் பொழுதோ மார்பக பகுதி கனமாக இருப்பது போல் உணர்ந்ததால் உங்களுக்கு மூச்சு திணறல் பிரச்சனை வருவதற்கான முதல் அறிகுறி.
 • அப்படி இல்லையெனில் மூச்சு சுவாசிக்க மூச்சை வேகமாக இழுக்கும் போது மார்பக பகுதி வலிக்கிறது என்றால் மூச்சு திணறல் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
 • ஒரு சிலர்க்கு சளி, இருமல் தொல்லை வரும்பொழுது சாதாரணமாக இருப்பதை விட வேறுபட்ட மாற்றத்தை உணர்வீர்கள். அப்படி நேருக்கு மாறாக உணர்ச்சி ஏற்பட்டால் உங்களுக்கு மூச்சு திணறல் இருப்பதற்கான அறிகுறிகள் தான். இவர்களால் 30 நிமிடத்திற்கு அதிகமாக நேராக தூங்க முடியாது.
 • குளிர்காலத்தில் உடல் குளிர், இருமல், காய்ச்சல் இருக்கும் பொழுது அவர்களின் உதடு, விறல் நுனி நீல நிறமாக இருக்கும். இன்னும் சிலருக்கு வேகமாக மூச்சை வெளியே விடும் போது சத்தம் கேட்கும். அதனை உயர்ந்த சத்தமானது ஸ்ட்ரிடோர் என்று அழைக்கப்டுகிறது. இது போல் பிரச்சனைகள் இருந்தால் மூச்சு திணறல் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் அதன் சிகிச்சை முறைகள்

மூச்சு திணறல் காரணம்:

Muchi Thinaral Symptoms in Tamil

 • மனிதர்களுக்கு மூச்சு திணறல் பிரச்சனை வருதற்கு முக்கிய காரணம் நம்மை சுற்றி இருக்கும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் தான் மனிதர்களுக்கு மூச்சு திணறல் பிரச்சனை வருகிறது. அதிகமாக பாலீத்தின் பைகளை எரிப்பதாலும்
  இயற்கைக்கு பாதுகாப்பாக இருக்கும் மரங்களை அளிப்பதால் தான் மூச்சு திணறகள் வருகிறது. இயற்கையை அழிப்பதால் அதிகம் குழந்தைகளைதான் மூச்சு திணறல் பாதிக்கிறது.
 • மூச்சு திணறல் வருவதற்கு காரணம் அதிகம் சளி தொல்லை, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்களை மூச்சு திணறல் அதிகம் பாதிக்கிறது.
 • இது போன்ற காய்ச்சல்கள் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து இருக்கும், அது மட்டுமில்லாமல் அவர்கள் சளி இருமல் இருக்கும் போது சளி பச்சை நிறமாகவும் இருக்கும்.
 • தொடர்ந்து இது போன்ற பிரச்சனை வந்தால் நுரையீரல் பகுதியில் இரத்த கட்டி அடைப்பு ஏற்படும். அதனாலும் மூச்சு திணறல் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
 • இரத்த சோகை உள்ளவர்கள் 10 அடி தூரம் நடந்தால் உடனே மூச்சு திணறல் பிரச்சனை வரும். இது போன்ற பிரச்சனைகள் இருத்தல் மூச்சு திணறல் வருவதற்கான காரணம் ஆகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்