தினமும் லெமன் டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா?

Advertisement

லெமன் டீ குடிப்பது நல்லதா கெட்டதா

நண்பர்களே வணக்கம் இன்றைய ஆரோக்கியம் பதிவில் லெமன் டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம். பொதுவாக அதிகளவு டீ காபி குடிப்பார்கள் அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று டீ காபி இல்லையென்றால் சிலருக்கு வேலையே புரியாது கொஞ்சம் பதட்டமாக இருப்பார்கள். இப்படி இருக்கும்பட்சத்தில்  சிலர் லெமன் டீ குடிப்பார்கள் இது உடலுக்கு நல்லதா கெட்டதா யாருக்காவது தெரியுமா? இதனை அனைவரும் டீ காபிக்கு பதிலாக குடித்து வருகிறார்கள். இது நல்லதா கெட்டதா வாங்க தெரிந்துகொள்வோம்..!

லெமன் டீ குடிப்பது நல்லதா?

எலுமிச்சை பழமானது வைட்டமின் சி அதிகம் உள்ள பொருள். லெமன் டீயில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் கல்லீரல் மற்றும் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை நீக்க உதவுகிறது.

தினமும் சாப்பிட்ட பின் செரிமானம்  செய்வதற்கு இந்த லெமன் உதவுகிறது. நம் வீட்டில் பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். வாந்தி வருவது போல் இருத்தால் எலுமிச்சை பழத்தை கொடுத்து இதனை நுகர்ந்துகொள் என்று சொல்வார்கள். காரணம் அதில் இருக்கும் சத்துக்கள் உடனே வாந்தி வருவதை நிறுத்தும்.

அதேபோல் தினமும் லெமன் டீ குடிப்பதால் அதில் இருக்கும் Astringent முகத்தில் இருக்கும் இறந்த செல்களை உருவாக்கி முகத்தை இளமையான தோற்றத்தில் வைத்திருக்கும்.

புற்று நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. லெமன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், Flavonoid-கள் புற்றுநோய் செல் வளர்ச்சியை தடுப்பதற்கு உதவுகிறது.

அதேபோல் சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெரிதும் உதவுகிறது. உடலில் இன்சுலின் அளவை குறையாமல் பார்த்து கொள்ள பெரிதும் உதவி புரிகிறது.

இது அனைத்திலும் முக்கியமான ஒன்றாகவும் அதிகளவு பாதிக்கப்படும் உடல் எடையை குறைக்க இந்த லெமன் டீ பயன்படுகிறது.

காலை மாலை இருவேளையும் லெமன் டீ குடிப்பவர்கள் அவர்களின் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியாக்கி உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.

இது மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல் பற்களுக்கு வலிமையை அளிக்கும். ஈறுகளின் வீக்கத்தை குறைக்கவும் உதவி செய்கிறது.

உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து நம்மை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவி செய்கிறது.

லெமன் டீ தீமைகள்:

லெமன் டீ என்று சொன்னவுடன் அனைவருமே அதனை டீ போல் சூடாக குடிப்பார்கள் அப்படி குடிப்பதால் நமக்கு நன்மையா தீமையா?

 எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி உள்ளது அதனை நாம் ஒரு டம்ளரில் வைத்து சூடு செய்யும் போது அதாவது 30 டிகிரி சூடு செய்யும் போது அந்த எலுமிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் சி உடைகிறது.  அதேபோல் 60 டிகிரி சூடு செய்யும் போது மொத்தமாக அத பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் அந்த பழம் இழந்து விடும். இதனால் நமக்கு தீமையே கிடைக்கும்.  

அதனால் டீ யை சூடவைக்க கூடாது என்பது கிடையாது எந்த அளவுக்கு சூடு செய்ய வேண்டும் என்பதில் கவனம் வேண்டும்.

ஓரளவு சூடாக இருக்க வேண்டும் அதிகளவு சூடு செய்வதால்  எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள் மறைந்து விடுகிறது.

அதனால் காலையில் டீ அல்லது தண்ணீர் எதுவானாலும் அதனை ஓரளவு சூடாக இருந்தால் அது நமக்கு நன்மையே ஆகும்.

 

தூக்கி வீசும் எலுமிச்சை தோலில் இவ்வளவு பயன் இருக்கிறதா.!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil

 

Advertisement