வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வயிற்று புண் குணமடைய பழம் | Vayiru Pun Sariyaga Tamil

Updated On: May 9, 2023 1:41 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

வயிற்று புண் குணமடைய | Stomach Ulcer in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் இன்று வயிற்று புண் இருந்தால் சாப்பிடவேண்டிய பழங்கள் என்ன என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக நம் உடலில் நோய்கள் வருவதற்கு காரணம் நாம் தான். உடலுக்கு தேவையான சத்துக்களை நாம் சாப்பிடும் உணவில் தான் கிடைக்கிறது. ஆனால் நம் சாப்பிடும் அனைத்து உணவிலுமே சத்துக்கள் உள்ளதா என்று கேட்டால் நிச்சியகமாக கிடையாது. இப்போது இருக்கும் காலகட்டத்தில் அதிகப்படியான துரிதஉணவு முறைங்களை சாப்பிட்டு வருகிறார்கள். அதனால் நம் உடலுக்கு தேவையில்லாத நோய்கள் வரும். அந்த வகையில் இன்று வயிற்று புண் குணமடைய சாப்பிடவேண்டிய பழங்கள் என்ன? வாங்க அதனை படித்து தெரிந்துகொள்வோம்.

வயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்

வயிற்று புண் வர காரணம்:

வயிற்று புண் வர காரணம்

  • வயிற்றில் குடல் பகுதியில் மேற்பரப்பில் மியூகோஸா படலம் நீண்ட நாள்கள் பிறகு அதில் எரிச்சல் உண்டாகும். அதில் அதிகமாக அமிலம் சுரப்பினால் பாதிக்கப்பட்டு சிதைந்து விடும். சுரப்பு மற்றும் பெப்சின் (ஜீரண என்சைம்) சுரப்பிற்கு அதிகமான காரம், எண்ணெயில் பொரித்த உணவு என அந்த சுரப்பியில் சிறு புண்ணாக தோன்றும் பின் அது நாளடைவில் வயிற்று பகுதியில் ஓட்டை ஏற்பட்டு, புன்னகை மாறுகிறது.
  • வயிற்று புண் வருவதற்க்கு முக்கியமான காரணம், டென்ஷன், உணர்ச்சிவசப்படுதல், கோவம், பொறாமை மற்றும் நம் உணவுகளில் சரியான முறைகள் இல்லாமல் தவறான உணவுகளை சாப்பிடுவதால் மற்றும் அளவுக்கு அதிகமான காரம் உட்கொள்ளுதல். இவை அனைத்துமே அமிலத்தை சுரக்க வைத்து அது நாளடைவில் வயிற்று புண்ணாக மாறுகிறது.

குடல் புண் ஆற பழம்:

  • வயிற்றில் புண் உள்ளவர்கள் தினமும் சாப்பிடவேண்டிய உணவுகளில் எந்த உணவை தவிர்க்கவேண்டும் என்று நினைப்பீர்கள் இல்லையேற்றல் எந்த உணவுகளை சாப்பிடலாம் என்று யோசிப்பார்கள். சிலர் பழங்கள் சாப்பிடால் குடல் புண் குணமாகுமா? என்று யோசிப்பீர்கள். அதற்கு இனி கவலைவேண்டாம் நீங்கள் எல்லாப்பழங்களையும் வாங்கி சாப்பிடுவதற்கு இந்த பதிவில் உங்களுக்காக வயிற்று புண் குணமாக சில பழங்களை பற்றி குறிப்பிட்டுருக்கிறோம் அதனை படித்து இந்த பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும் வயிற்று புண் நீங்கிவிடும்.

வாழைப்பழம் நன்மைகள்:

வாழைப்பழம் நன்மைகள்

 

  • மா பலா வாழை என்று சொல்வதுபோல் இது ஒவ்வொன்றும் அனைத்து வகையிலும் உதவியாக இருக்கும். அது போல் தான் வாழைப்பழத்திற்கு நிறைய வகைகள் உள்ளது. ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு மகிமை உண்டு. அது போல் தான் பச்சை வாழைப்பழம். இந்த பச்சை வாழைப்பழத்தை தினமும் காலையிலோ அல்லது இரவிலோ ஒரு நாளுக்கு ஒரு பழம் சாப்பிட்டு வந்தால். வயிற்று பகுதில் உள்ள புண்ணை இந்த பச்சைப்பழத்தில் உள்ள சத்துக்கள் ஆற்றிவிடும்.

மாதுளம்பழத்தின் பயன்கள்:

மாதுளம்பழத்தின் பயன்கள்

  • பொதுவாக மாதுளைப்பழம் என்றால் அதில் எவ்வளவு சத்துக்கள் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும் இதனை சாப்பிடுவதால் நம் உடலுக்கு எவ்வளவு சத்துக்கள் சேரும் என்பதும்  உங்களுக்கு தெரியும், ஆனால் மாதுளைப்பழம் ஒரு நோய்க்கு மருந்தாக விளங்குகிறது. முக்கியமாக வாயிற்று புண் நீங்குவதற்கு பெரிதும் உதவுகிறது.
  • தினமும் ஒரு பழமோ, ஜூஸ் ஏதோ ஒன்று உட்கொண்டால் ஒரே வாரத்தில் குடல் புண்ணை ஆற்றிவிடும். அந்த அளவிற்கு மாதுளைப்பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் Health tips tamil

 

Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now