வாந்தி உடனடியாக நிற்க இயற்கை வைத்தியம் | Home Remedy for Vomiting in Tamil

Vomit Nirka in Tamil

வாந்தி நிற்க என்ன வழி | Vomit Nirka in Tamil

வாந்தி வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அதில் முக்கியமான ஒன்று நாம் எடுத்து கொள்ளும் உணவு. நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவை சாப்பிடும் போது, ஜீரண கோளாறு ஏற்படும் போது மற்றும் நமக்கு தொற்று இருக்கும் போது வாந்தி வரும். ஒரு சிலருக்கு பயணம் ஒத்துப்போகாமல், பயணத்தின் போது வாந்தி வரும். இது போன்ற வாந்தி வந்தால் அதை தடுப்பதற்கான இயற்கையான வழியை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

ஏலக்காய் தண்ணீர்:

வாந்தி நிற்க என்ன வழி

 • வாந்தி நிற்க என்ன வழி: முதலில் இரண்டு ஏலக்காய் எடுத்து அதனை ஓரளவு தட்டி வைத்து கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் 200 ml தண்ணீர் ஊற்றி அதில் இடித்து வைத்த ஏலக்காயை சேர்த்து 2 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்.
 • கொதித்த பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி அரை மணி நேரம் ஆறவைத்து குடிக்கவும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.

எலுமிச்சை:

வாந்தி நிற்க வைத்தியம்

 • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது, அரை டேபிள் ஸ்பூன் சீரக பொடி இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து 1 டம்ளர் நீரில் கொதிக்க வைக்கவும்.
 • தண்ணீர் கொதித்தவுடன் அதை வடிகட்டி அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து குடித்து வந்தால் உடனடியாக வாந்தி நிற்கும்.

கிராம்பு:

Vomit Nirka in Tamil

 • வாந்தி நிற்க வைத்தியம்: வாந்தி அல்லது குமட்டல் வருவது போல இருந்தால் கிராம்பு துண்டை வாயில் போட்டு சப்ப வேண்டும்.
 • கிராம்பில் உள்ள வாசனை மற்றும் சுவை வாந்தியை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
வாய் கசப்பு போக என்ன செய்ய வேண்டும்

துளசி சாறு:

Vomiting Home Remedies in Tamil

 • வாந்தி நிற்க பாட்டி வைத்தியம்: தேவையான அளவு துளசி சாறு எடுத்து அதில் சிறிதளவு கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடனடியாக வாந்தி நிற்கும்.
 • பயணத்தின் போது வாந்தி வருபவர்கள் புளிப்பு சுவையுள்ள திராட்சை அல்லது மிட்டாய் போன்றவற்றை சாப்பிடலாம்.

உப்பு – சர்க்கரை கலந்த நீர்:

Vomiting Treatment in Tamil

 • Vomiting Home Remedies in Tamil: வாந்தி அல்லது குமட்டல் வருவதற்கான அறிகுறி தென்பட்டவுடனே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது.
 • வாந்தி வர மாதிரி இருந்தால் உப்பு மற்றும் சர்க்கரை கலந்த நீரை பருகினால் உடனடியாக வாந்தி நின்று விடும்.

சோம்பு நீர்:

வாந்தி நிற்க பாட்டி வைத்தியம்

 • வாந்தி நிற்க பாட்டி வைத்தியம்: பெருஞ்சீரக விதைகளை மென்று சாப்பிட்டு வந்தால் உடனடியாக வாந்தி வருவதை தடுக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தியை தடுக்க சோம்பு விதைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

இஞ்சி:

Vomiting Treatment in Tamil

 • Vomiting Treatment in Tamil: தேவையான அளவு இஞ்சியை எடுத்து அதனை தோல் உரித்து நசுக்கி 1 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து பருகினால் உடனடியாக வாந்தி நிற்கும்.
 • தொடர்ந்து வாந்தி வந்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து காணப்படும். எனவே நீர் அதிகமாக பருக வேண்டும். தண்ணீர் வேண்டாம் என்று நினைப்பவர்கள் மோர் அல்லது இளநீர் குடிக்கலாம்.
 • தொடர்ந்து வாந்தி வந்துகொண்டே இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இரத்த வாந்தி வருவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்