வாழைப்பூ மருத்துவ பயன்கள் | Valaipoo Uses in Tamil

Valaipoo Uses in Tamil

வாழைப்பூ நன்மைகள் | Valaipoo Benefits in Tamil

நம் முன்னோர்கள் வாழைமரத்தை வாழையடி வாழை என்று சொல்வார்கள். வாழை பூவினை வாழை மொட்டு என்றும் கூறுவார்கள். வாழைமரத்தை எடுத்துக்கொண்டால் இலை முதல் தண்டு வரையிலும் நமக்கு மருத்துவ பயன்களை அளிக்கிறது. சிலருக்கு வாழைப்பூவில் செய்யும் உணவுகளை அறவே பிடிக்காது. அதில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் பல நோய்கள் குணமாகிறது. வாங்க என்னென்ன நோய்கள் குணமாகிறது என்று இப்போது தெரிந்துக்கொள்ளலாம்.

வாழை தண்டின் பயன்கள்

வாழைப்பூ மருத்துவ பயன்கள்:

 • வாழைப்பூவை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் தேவையில்லாத கொழுப்புகள் கரைந்துவிடும். பசைத்தன்மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீராகும்.
 • பெண்களுக்கு மாதவிடாய் சீராக வருவதற்கு, வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்சனை சரியாக வாழைப்பூவினை சமைத்து தினமும் சாப்பிட்டு வரலாம்.
 • வெயில் காலம் வந்துவிட்டால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் சூடு பிரச்சனையினால் அவதிப்படுவார்கள். உடலில் உள்ள சூடு தணிவதற்கு, குடலில் ஏற்படக்கூடிய புண்கள் ஆறுவதற்கு வாழைப்பூவினை சாப்பிடலாம்.
 • வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவில் உப்பு சேர்த்து வேக வைத்து அதன் சாறை குடித்து வரலாம்.

vaalai poo benefits

வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
 • ஆன்மார்களுக்கு விந்துவை விருத்தி செய்யும்.
 • மலட்டு தன்மை பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவினை சாப்பிட்டு வரலாம்.
 • இரத்த அழுத்தம், இரத்த சோகை உள்ளவர்கள் வாழைப்பூவினை தாராளமாக சாப்பிடலாம்.
 • மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும்.
 • பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளை சரி செய்வதற்கு வாழைப்பூ மிகவும் பயன்படுகிறது.
 • வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் கோளாறுகள் சரியாகும்.
 • இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்புள்ளது.
 • உள்மூலம்வெளிமூலப் புண்கள், மூலக்கடுப்புஇரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது இந்த வாழைப்பூ. 

 

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்