கை விரல் வீக்கம் குறைய | Viral Veekam Kuraiya

Kai Viral Veekam Home Remedy Tamil

கை விரல் வீக்கம் குணமாக | Kai Viral Veekam Home Remedy Tamil

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் கை விரலில் ஏற்படும் வீக்கத்தினை சரி செய்ய சில டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம். சிலருக்கு அதிகமாக வேலை செய்யும் போது கை விரலானது வீங்கிப்போய்விடும். அது ஏன் என்று தெரியாமல், சிலர் அதனை அப்படியே விட்டு விடுவார்கள். ஏன் இப்படி வீங்கிப் போகிறது அதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் தான் பலரும் இருப்பர். உடலில் திசுக்கள் அல்லது மூட்டு பகுதிகளில் திரவம் சேரும் போது வீக்கம் அதிகமாக ஏற்படுகிறது. சில நேரங்களில் அந்த வீக்கம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதுபோன்ற வீக்கங்கள் உங்கள் விரலில் உள்ள மோதிரங்களை சரி செய்வதற்கு கூட சிரமம் ஏற்படும்.  உடலில் அதிக அளவு உப்பு இருந்தால் கூட மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். சில நேரங்களில் இது போன்ற வீக்கங்கள் சில உடல் நலப் பிரச்சனைகளின் அறிகுறிகளாகக் கூட இருக்கும். வாங்க விரல் வீக்கத்தினை சரி செய்ய இயற்கை டிப்ஸ்களை பார்க்கலாம்.

கை கால் நடுக்கம் சரியாக சித்த மருத்துவம்..!

விரல் வீக்கம் குறைய:

நொச்சி இலைகளை வைத்து கை மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கத்திற்கு நாமே வீட்டில் மருந்து தயாரிக்கலாம். 

டிப்ஸ் 1: முதலில் நொச்சி இலைகளை அரைத்து அதன் சாறினை தனியாக எடுத்துக்கொள்ளவும். ஒரு கரண்டி அளவு சாறுடன் சம அளவு தேன் கலந்து காலையில் உணவுக்கு முன்பு சாப்பிட்டு வர விரல்களில் ஏற்படும் வலி, வீக்கம், கை விறைப்பு தன்மைமுற்றிலும் நீங்கும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் தேனிற்கு பதிலாக மிளகுப்பொடி சேர்க்கலாம்.

டிப்ஸ் 2: விரல் வீக்கத்திற்கு சீரகம் பயன்படுத்தி மருந்து வீட்டிலே தயாரிக்கலாம். அரை கரண்டி சீரகம், கால் கரண்டி மஞ்சளுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு நீரை வடிகட்டி காலை, மாலை என இரு வேளையில் 50 முதல் 100 மில்லி வரை குடித்து வர கை விரலில் ஏற்படும் வீக்கம், வலி மறைந்து போகும். சீரகம் உடலுக்கு ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறது. மேலும் சீரகமானது உடலில் மஞ்சள் காமாலை நோயை அண்டவிடாது.

கை கால் மரத்துப்போதல் சரியாக பாட்டி வைத்தியம்..! 

 

டிப்ஸ் 3: அடுத்ததாக கை விரல் வீக்கத்திற்கு அமுக்கரா சூரணம். முதலில் ஒரு கரண்டி அமுக்கரா சூரணத்தை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் காய்ச்சி வைத்துள்ள பால், தேன் கலந்து குடித்து வர கை, கால்கள் விரல்களில் ஏற்படும் வலி, வீக்கம் குறைய தொடங்கும். வீக்கத்தை குணமடைய செய்யக்கூடிய மருந்து அமுக்ரா.

டிப்ஸ் 4: விரல் வீக்கத்திற்காக மேல்பூச்சு தைலம். மேல்பூச்சு தைலம் ரெடி செய்வதற்கு 50 மில்லி அளவு விளக்கெண்ணெய், சம அளவு வேப்ப எண்ணெய் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்க வேண்டும். இதனுடன் சீரகத்தை பொடி செய்து வைத்து அதனையும் ஹீட் செய்யவும். இந்த தைலத்தை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு விரல்களில் வீக்கம் உள்ள இடத்தில் மசாஜ் செய்து வந்தால்  கைகளில் ஏற்படும் விரைப்பு தன்மை, கைகளில் வீக்கம் இல்லாமல் போகும். விரலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>உடல் ஆரோக்கிய குறிப்புகள்