சுகர் குறைய என்ன செய்ய வேண்டும்
ஹாய் நன்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும் காரணம் இப்போது யார் வீட்டில் சுகர் இல்லாமல் ஆளுங்க இருக்கிறார்கள் அதனால் அனைவருமே தெரிந்துகொண்டிடால் அவர்களுக்கு உதவி செய்யலாம் ஆகவே இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளவும்.
பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு இதை கொடுக்காதீர்கள் அதனை கொடுக்காதீர்கள் என்று சொல்லியே அவர்கள் ஆசை பட்டத்தை பாதி சாப்பிட முடியாமல் போகிறது. அனைவரை மாதிரித்தான் அவர்களுக்கும் ஆசை இருக்கும் அதனால் அனைத்தையும் சாப்பிட தோன்றும். அப்படி சாப்பிட தோன்றும் பொருட்களில் வேர்க்கடலை ஒன்று இதை சாப்பிட்டால் கொழுப்பு அதிகமாகும் என்பதனால் சாப்பிட அச்சம் சொல்வார்கள் ஆனால் அது தவறு அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பார்ப்போம்..!
சுகர் குறைய என்ன சாப்பிடலாம்:
இந்த வேர்கடலையை தினமும் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். இதில் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்துள்ளதனால் அதனை உட்கொள்ளலாம். இதில் கெட்ட கொலஸ்டரால் உள்ளடக்கவில்லை. எனவே இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த வேர்க்கடலையில் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது. அது இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கவும் ஆற்றலாகவும் மாற்றவும் உதவுகிறது.
ஒரு நாளுக்கு எத்தனை வேர்க்கடலையை உட்கொள்ள வேண்டும்:
தினமும் அதாவது ஒரு நாளுக்கு 45 கிராம் வேர்க்கடலை 45 கிராம் என்றால் 16 வேர்கடலையாகும் அதனை உட்கொண்டால் நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள்:
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் சிலவகையான புற்று நோய் வராமல் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வேர்க்கடலையில் கணிசமான அளவு புரதம், வைட்டமின் ஈ மற்றும் ரெஸ்வெராட்ரால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவைகள் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.
உடல் எடை குறைய டிப்ஸ்:
வேர்க்கடலையில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து கொண்டதால் எடை குறைக்க நினைப்பவர்கள் உகந்த தின்பண்டமாக உள்ளது இந்த வேர்க்கடலை. இதில் புரத சத்துக்கள் அதிகம் உள்ளது. அதனால் உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவியாக இருக்கும். உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களும் இந்த வேர்க்கடலையில் கிடைத்துவிடும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரைவள்ளி கிழங்கு மருந்தா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |