மாதவிடாய் காலத்தில் இந்த பொருட்களை உணவில் சேர்த்து கொள்ளாதீர்கள்..! சேர்த்தீர்கள் என்றால் அவ்வளவு தான்..!

5 important things you should avoid during periods

மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்  | 5 Important Things You Should Avoid During Periods

பொதுவாக பெண்களுக்கு இந்த பிரச்சனை மாதம் மாதம் வருவது தான். அது வேறு ஒன்றும் இல்லை மாதவிடாய் தான். இந்த நாட்களில் வயிற்று வலியானது அதிகமாக இருக்கும். இது எதனால் வருகிறது, அந்த நேரத்தில் நாம் என்ன உணவுகளை உட்கொள்வது, மேலும் எந்த உணவுகளின் மூலம் நமக்கு என்ன சத்துக்கள் ஏற்படுகிறது அதுபோல என்ன உணவுகளை தவிர்த்தால் நமக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை தடுக்க முடியும் என்பதை இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்..!

மாதவிடாய் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்:

  • பழங்கள்
  • பச்சை காய்கறிகள்
  • இஞ்சி
  • கோழி
  • மீன்
  • மஞ்சள்
  • ஆளிவிதை எண்ணெய்
  • பருப்பு வகைகள்
  • தயிர்
  • மிளகு கீரை

இந்த பொருட்கள் அனைத்துமே மாதவிடாய் காலங்களில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள். மேலும் இதில் உள்ள சத்துக்கள் அனைத்துமே உங்களின் உடலுக்கு  சத்துக்கள் அளிக்கும். சத்துக்கள் இருந்தால் உடலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக பாட்டி வைத்தியம்..!

மாதவிடாய் காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள்:

உப்பு: 

 5 important things you should avoid during periods

அதிக உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளவதை தவிர்க்கவும். உப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வதன் மூலம் நீர்சத்துக்கள் உடலில் அதிகம் இருக்கும். ஆனால் இதன் விளைவாக கால் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் சோடியம் அதிகம் உள்ள உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்கவும்.

சர்க்கரை: 

 5 important things you should avoid during periods

சர்க்கரையை அளவாகவே பயன்படுத்துவது மிகவும் நல்லது. அதனை அளவுக்கு அதிகமாக சேர்த்து கொண்டால் அது நாளடைவில் பெரிய பாதிப்புகளை  ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் மாதவிடாய் நேரத்தில் உடல் சோர்வாகவும், மனதில் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது.

காபி: 

 5 important things you should avoid during periods

காபி கால் வீக்கத்தை ஏற்படுத்தலாம். அதேபோல் மாதவிடாயின் போது அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதன் மூலம் வயிற்று வலியை ஏற்படுத்தும். மேலும் அதனை சரியாக பயன்படுத்துவது மிகவும் நல்லது.

காரமான உணவுகள்: 

 மாதவிடாய் காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள்

காரமான உணவுகள் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் குமட்டல் போன்றவற்றைக் ஏற்படுத்தும். ஆகவே காரமான உணவுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 மாதவிடாய் நாட்களில் பெண்கள் இந்த தவறை செய்யாதீர்கள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil