நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்க இந்த 5 விஷயத்தை கடைபிடிக்கவும்..!

5 Basic Rules For Good Health in Tamil

ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா | 5 Basic Rules For Good Health in Tamil

பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் இருக்கும் கேள்வி தான் நான் ஆரோக்கியத்துடன் இருந்தாலும் திடீரெண்டு உடல் உபாதைகள் வந்து விடுகிறது அதற்கு காரணம் என்ன தெரியுமா..? நாம் செய்யும் சில தவறுகள் தான் நம்  ஆயுளையும் பாதிக்கும் உடலையும் பாதிக்கும்.

அப்படி என்ன தவறுகளை செய்கிறோம் என்று நினைப்பீர்கள். நாம் உணவு முறைகளிலும் சில தவறான நேரத்தில் உண்பதால் கூட சில நேரத்தில் உடல் உபாதைகள் ஏற்படும். கேட்பதற்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். இது போல் நாள் தோறும் செய்யும் , செய்யக்கூடாத தவறுகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

5 Basic Rules For Good Health in Tamil:

உடற்பயிற்சி நன்மைகள்:

தினமும் உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. அதாவது உடலை சும்மாவே வைத்திருத்தல் கூடாது. நீங்கள் நினைப்பீர்கள் அந்த காலத்தில் உடற்பயிற்சி செய்து தான் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்களா என்று அது சரி தான். ஆனால் அவர்கள் வாழ்க்கை முறை வேறு இப்போது இருக்கும் வாழ்க்கை முறை வேறு. அவர்கள் உடற்பயிற்சி பதிலாக காலையில் எழுந்து வெகுதூரம் நடந்து பேசி செல்வார்கள் அல்லது வேறு வேலைகளை செய்வார்கள்.

இதன் மூலம் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை காத்துக் கொண்டார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் அப்படி இல்லை. பெண்கள் அந்த காலத்தில் செய்த வேலைகள் அனைத்துமே உடற்பயிற்சி தான். இப்போது அவர்கள் எதற்கு எடுத்தாலும் மிக்சி கிரைண்டர் என்று மாறிவிட்டார்கள். ஆகவே தினமும் உடற்பயிற்சி அவசியம்.

தூக்கம்:

தூக்கமானது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அங்கமாக உள்ளது. உடல் மற்றும் மனது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பரந்த நிலையில் இருக்க தூக்கம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அமெரிக்கர்கள் ஒரு நாளுக்கு சராசரியாக 6.7 மணி நேரம் தூங்குகிறார்கள்.

ஆனால் இப்படி தூங்குவது தவறு என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆகவே ஒரு மனிதன் ஒரு நாளுக்கு சராசரியாக 7 மணி நேரத்திலிருந்து 9 மணி நேரம் வரை தூங்குவது அவசியம். ஆகவே தினசரி தூங்குவது சரியாக இருக்க வேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ நன்மைகள்

உணவு முறை:

உணவு முறைகளில் கவனம் தேவை. அதாவது மிகவும் பதப்படுத்தபட்ட உணவுகளை சாப்பிடுவதால் அதில் எந்த ஒரு சத்துக்களும் கிடைப்பதில்லை. உணவுகளை பதப்படுத்தப்பட்ட பேக்குகளில் வைப்பதால் அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

ஆகவே முறையாக உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. மேலும் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பதாலும் உடல் உபாதைகள் வந்துவிடும். சரியான நேர உணவுகள் அவசியம்.

மன அழுத்தம்:

மனதை எப்போதும் ஒருநிலைப்படுத்தி உங்களின் மனதை கட்டுப்படுத்தி சரியாக வைத்துக் கொள்ளவும். இப்படி செய்வதால் மனது மட்டுமில்லாமல் உடலும் சரியாக இருக்கும். ஆகவே தேவையில்லாத விஷயத்தை அதிகம் நினைத்து மன அழுத்தத்திற்கு உள்ளாகக் கூடாது.

பாதுகாப்பு: 

மனதை எப்படி ஒரு நிலையில் வைத்துக்கொள்ள வேண்டுமோ அதேபோல் நாம் இருக்கும் இடத்தை சுத்தமாகவும் மற்றவர்களுக்கு எந்த விதத்தில் பாதிக்காத அளவிற்கு நம்மையும் மற்றவர்களை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணங்களை மட்டும் நினைப்பதும் ஒரு விதமான உடல் பாதுகாப்பை சார்ந்தது தான்.

உடல் எடையை குறைக்க ரோஜா பூ தேநீர்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil