அக்கி குணமாக | Akki Disease Treatment in Tamil

Advertisement

அக்கி நோய் குணமாக | Akki Skin Disease Home Remedies in Tamil

Akki Disease Treatment in Tamil: வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் அக்கி நோய் குணமாக சில டிப்ஸ்களை பார்க்கலாம். சிலருக்கு அக்கி நோயானது தோல் பகுதிகளில் வரும். அதற்கு எந்த வைத்தியமும் செய்யாமல் தானாகவே சிறிது நாளிலே சரியாகிவிடும். முக்கியமாக அக்கி நோயினால் பெரும் பாதிப்பு அடைந்தவர்களுக்கு அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலோ, எய்ட்ஸ், புற்றுநோய் போன்றவை இருந்தாலோ, அக்கி கொப்பளங்கள் பெரிதாக வரும். இதனால் பாதிப்பானது அதிகமாக இருக்கும். இந்த அக்கி நோய் வைரஸால் ஏற்படுகிறது. அம்மை என்று சொல்லக்கூடிய சிக்கன்பாக்ஸை உருவாக்கும் வைரஸ் கிருமியும் இதுதான். இந்த அக்கி நோயை ஆங்கிலத்தில் ஷிங்கிள்ஸ் என்று அழைப்பார்கள். இந்த நோய் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் வரும். அக்கி வந்த இடத்தில் நரம்பு வலி மிகவும் தொந்தரவு கொடுக்கும். மூளை பாதிப்பு பிரச்சனை, காது கேட்காமல் போதல், கண் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். சரி அக்கி நோய்க்கு எது மாதிரியான சிகிச்சை அளித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

தோல் நோய் நீங்க மருத்துவம்

அக்கி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:

  1. அக்கி நோய் இருப்பவர்கள் வெயிலில் எங்கும் அலையாமல் படுத்து ஓய்வு மட்டுமே எடுக்க வேண்டும்.
  2. பாலிஸ்டர் போன்ற ஆடைகள் அணிவதை தவிர்த்து பருத்தியால் ஆன ஆடைகளை அணிவது நல்லது.
  3. அக்கி இருப்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
  4. உணவுகளில் எதுவும் கட்டுப்பாடு இல்லை, இருப்பினும் காரமான உணவு வகைகளை தவிர்த்து கொள்வது நல்லது.
  5. தோலில் அக்கி நோய் இருப்பவர்கள் தடவுவதற்கு ஆன்டி பயாடிக் க்ரீம் பயன்படுத்தலாம்.
  6. உள்ளுக்குள் இருப்பவர்கள் ஆன்டி வைரல் மாத்திரைகள்சாப்பிடலாம்.
தேமல் மறைய என்ன செய்வது

அக்கி நோய் குணமாக:

  1. பூங்காவி எனும் மூலிகை பொடியை பன்னீருடன் கலந்து நன்றாக மிக்ஸ் செய்து அக்கி உள்ள இடத்தில் தடவி வர எரிச்சல், வலி குறையும்.
  2. அக்கி நோய்க்கு ஊமத்தை இலையை நன்றாக அரைத்து அதனுடன் வெண்ணெய் சேர்த்து கலந்து அக்கியின் மேல்தடவவும். அக்கியினால் உண்டான கொப்பள கட்டிகள் குறையும்.
  3. குங்கிலிய பற்பம் 10-கிராம் அளவிற்கு எடுத்து அதில் எலுமிச்சை அளவிற்கு வெண்ணையை கலந்து காலை மற்றும் மாலை இரு வேளை சாப்பிடவும். உண்ணவும். 7-நாள் தொடர்ந்து இதனை சாப்பிட்டு வர அக்கி நோய் விரைவில் ஆறும்.
  4. ஆல மரத்தின் விழுதினை சாம்பல் செய்து தேங்காய் எண்ணெயில் சாம்பலை மிக்ஸ் செய்து தடவி வர அக்கி நோய் குணமாகும்.
  5. செம்மர பட்டையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து உடலில் அக்கி உள்ள இடத்தில் பூசி வந்தால் அக்கி குறையும்.

அக்கி நோய் உள்ளவர்கள் மேல் கூறிய டிப்ஸ்களை பாலோ செய்து பாருங்கள்..நல்ல நிவாரணம் பெறலாம்..! 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement