இந்த யோகாசனம் செய்வதால் இவ்ளோ நன்மைகளா..!

anantasana yoga benefits in tamil

அனந்தாசனம் பயன்கள்

வணக்கம்  அன்பான நேயர்களே… இன்றைய ஆரோக்கியம் பதிவில் அனந்தாசனம் யோகா செய்வதால் நமது உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அனைவருமே யோகாசனம், உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்யவேண்டும். எத்தனையோ யோகாசனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு யோகாசனத்திற்கும் ஒரு பலன் கட்டாயம் உண்டு. நாம் தினமும் அனந்தாசனம் செய்வதால் நம் உடலும் உள் உறுப்புகளும் புத்துணர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

இந்த யோகாவை நாம் தினமும் செய்து வருவதால் நமது உடலும் மனமும் ஆனந்தமாக இருக்கும். அதனால் தான் இந்த யோகாசனத்திற்கு அனந்தாசனம் என்ற பெயர் வந்தது. வாங்க நண்பர்களே இந்த யோகா செய்வதால் நமது உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்பிணி பெண்கள் தினம்தோறும் யோகா செய்யலாமா..?

அனந்தாசனம் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

அனந்தாசனம் செய்யும் முறை: 

  1. முதலில் வலது காலை நன்றாக மேலே உயர்த்த வேண்டும்.
  2. பின் வலது கால் பெரு விரலை வலது கையினால் பிடிக்க வேண்டும்.
  3. தலையும் கண்களும் இடது பக்கம் பார்ப்பது போல இருக்க வேண்டும்.
  4. பின்னர் காலை மெதுவாக கீழே இறக்கி நேராக படுக்க வேண்டும்.
  5. இதுபோல காலை மாற்றியும் செய்யலாம்.

சுவாச பிரச்சனைகள் வராமல் தடுக்க:

இந்த அனந்தாசனம் யோகா செய்வதால் சுவாசம் சம்மந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தடுக்கலாம். இது நாசியில் ஏற்படும் அடைப்பை சரி செய்கிறது. தினசரி 10 நிமிடம் இதை செய்து வருவதால் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பதை உணர்வீர்கள். மேலும், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த யோகாசனம் செய்து வருவதால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

உடல் எடை குறைய: 

இந்த அனந்தாசனம் யோகா செய்வதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. கைகள் மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கு உதவுகிறது. இந்த யோகாசனத்தை தினமும் செய்து வருவதால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதை தடுக்க முடியும்.

எலும்புகள் பலம் பெற:

தினமும் ஒரு 10 நிமிடம் அனந்தாசனம் செய்து வருவதால் எலும்புகளை வலிமையாக வைக்க உதவுகிறது. எலும்புகளில் ஏற்படும் வலி கை மற்றும் கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இது மனதிற்கு அமைதியை தருகிறது. மூட்டு வலி மற்றும் முதுகு வலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

செரிமான பிரச்சனைகளை தடுக்க:

தினசரி இந்த யோகா செய்து வருவதால் செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். இது குடல் அமைப்பை செயல்படுத்த உதவுகிறது. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil