சின்ன நெல்லிக்காய் பயன்கள் | Chinna Nellikai Benefits in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அரை நெல்லிக்காயில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். நாம் அனைவருக்குமே பெரிய நெல்லிக்காயை விட சிறிய நெல்லிக்காய் அதிகம் பிடிக்கும். அதனை சாப்பிடுவதற்கு முன்னால் அதிலுள்ள நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அரை நெல்லிக்காயில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகையால், இதனை ஊறுகாய் செய்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட்டால் மட்டுமே அதன் முழு சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.
இந்த சீசன் நெல்லிக்காய், கொய்யாக்காய் சீசன் தான். ஆகவே அதனுடைய நன்மைகளை பற்றி தெரிந்துகொண்டால் எங்கு பார்த்தாலும் வாங்கி சாப்பிடுவீர்கள் அல்லாவா ஆகவே இந்த பதிவை படித்து நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..! எவ்வளவு தான் பழங்கள் இருந்தாலும் நெல்லிக்காய்க்கு தனி சத்துக்கள் உள்ளது. இதனுடைய வகை தான் என்று இன்னொன்று உள்ளது அது தான் பெரிய நெல்லிக்காய் அதனை 1 சாப்பிடால் 2 ஆப்பிளுக்கு சமம். ஆகவே அதற்கு எவ்வளவு சத்துங்கள் உள்ளதோ அது எவ்வளவு அரை நெல்லிக்காய்க்கு உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
அரை நெல்லிக்காய் நன்மைகள்:
தலைமுடி பிரச்சனை:
அரை நெல்லிக்காய் தலை முடி பிரச்சனைக்கு தீர்வு தருகிறது, மேலும் முடி கருப்பாக வளரவும் மற்றும் பொடுகு பிரச்சனைக்கு உதவி செய்கிறது.
சரும பாதுகாப்பிற்கு நல்லது:
அரை நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட ஆன்டி ஆக்ஸிடன்ட் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
கண் பார்வைக்கு நல்லது:
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி நெல்லிக்காயிற்கு உண்டு. ஆகையால், கண் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கும் அரை நெல்லியை கொடுங்கள்.
குழந்தைக்கு நல்லது:
குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும். வயிற்று புண், செஞ்சரிச்சல், ஜீரணக்கோளாறுகள், மலச்சிகள் அனைத்திற்கும் நல்ல மருந்தாக உள்ளது.
பிராண வாயுவை அதிகரித்து செல்களை புத்துணர்ச்சியுடன் வரவேற்கிறது.
வெள்ளை படுதல் குணமாக:
பெண்களுக்கு உடலலியல் ஏற்படும் சூடு காரணமாக வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் கோளாறுகள் என அனைத்து பிரச்சனைக்கு தீர்வு தருகிறது.
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு உள்ளதா..? இது தெரியாமல் போச்சே..!
சூடு குறைய என்ன செய்ய வேண்டும்:
காய்ந்த 100 கிராம் நெல்லிக்காயை எடுத்து 100 மில்லி மோரில் முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து குளித்தால் சூடு நீங்கும், கண் பார்வை தெளிவாகும், முடி உதிர்வு நீங்கும், பொடுகு பிரச்சனை நீங்கும், மேலும் மன அழுத்தம், தலைவலி, தூக்கமினமை அனைத்திற்கும் ஒரு மருந்தாக விளங்குகிறது.
சர்க்கரை நோய் குறைய என்ன சாப்பிட வேண்டும்:
சர்க்கரை நோயாளி இதை எங்கு பார்த்தாலும் வாங்கி சாப்பிடுங்கள் அது உங்களுக்கு நல்ல தேர்வை கொடுக்கும்.
இரத்த சோகை தடுத்தல்:
அரை நெல்லிக்காயில், இரும்பு, கால்சியம், பாஸ்பரம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இது இரத்த சோகைக்கு மருந்தாக உள்ளது. ஆகவே நீங்கள் அரை நெல்லிக்காயை சாப்பிடலாம்.
பித்தம் குறைய என்ன சாப்பிடலாம்:
பலருக்கு தலை சுற்றல் மயக்கம், வாந்தி, இரத்த அழுத்தம் என அனைத்திற்க்கும் நல்ல நிவாரமாக உள்ளது அரை நெல்லைக்காய் ஆகவே எங்கு பார்த்தாலும் வாங்கி சாப்பிடுங்கள்..!
ஒரு துண்டு நெல்லிக்காய் சாப்பிட்டால் அப்படி என்ன நன்மை கிடைக்க போகிறது?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |