வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அரச இலையின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Updated On: August 16, 2023 1:21 PM
Follow Us:
அரச இலையின் ஆரோக்கிய நன்மைகள்
---Advertisement---
Advertisement

அரச இலை பயன்கள் | Arasa ILai Payangal

வணக்கம் நண்பர்களே. இன்று நம் பொதுநலம் ஆரோக்கியம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள்..? அரசமர  இலையின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள போகிறோம். வாங்க நண்பர்களே அரச இலையின் அற்புத பயன்களை பற்றி பார்ப்போம்.

அரச இலையின் ஆரோக்கிய நன்மைகள்:

பெரும்பாலும் அரசமரம் நம் இந்தியாவில் அதிகளவில் காணப்படுகிறது. சாலை ஓரங்களிலும், வீட்டின் அருகிலும் காணப்படும் இந்த அரசமரம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அரசமரம் அதிகளவு ஆக்சிஜனை கொடுக்கக்கூடியது. இதில் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த அரச இலைகளில் அதிகளவு ஸ்டெராய்டு, வைட்டமின்கள், மெத்தியோனின், கிளைசின், அஸ்பார்டிக் அமிலம், டானிக் அமிலம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இது மட்டுமின்றி அரசமரத்தின் ஒவ்வொரு பாகங்களும் பல நன்மைகளை கொடுக்கிறது.

  • அதிகளவு சளி தொல்லை உள்ளவர்கள் இந்த அரச இலையை பாலில் கலந்து கொதிக்க வைத்து தினமும் 2 முறை குடித்து வருவதன் மூலம் சளி தொல்லை நீங்கும். மேலும், காய்ச்சல் விரைவில் குணமாகும்.
  • சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் இந்த அரசமர காயை பொடி செய்து அதனுடன் கடுக்காய் பொடியை சமமான அளவு பாலில் கலந்து குடித்து வருவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைகிறது.
  • அரசமர விதையை பொடி செய்து அதை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கிறது. அதேபோல் இரத்தம் சுரக்க உதவுகிறது.
  • அரச இலையுடன் தேன் கலந்து கஷாயம் போல் குடித்து வருவதால் இரைப்பை கோளாறுகள் நீங்கும்.
சிறுகீரை பயன்களை பற்றி தெரிந்து கொள்வோமா
  • அரச இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை போக்குகிறது.
  • அரச இலையை பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுபோக்கு குணமாகும்.
  • அரச இலை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இரவு நேரங்களில் அரச இலையை தண்ணீரில் ஊறவைத்து தினமும் காலையில் இதை குடித்து வர இதயம் படபடப்பு நீங்கும். இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் அரச இலையை காயவைத்து பொடியாக செய்து தினமும் நீரில் கலந்து குடித்து வருவதால் நல்ல பயன் கிடைக்கும்.
  • இந்த இலைகளை கற்கண்டுடன் சேர்த்து அரைத்து, அதை தினமும் நீரில் கலந்து குடித்து வர கல்லீரல் பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.
  • கண் வலிக்கு அரச இலையை கசக்கி போடுவதன் மூலம் நல்ல பலனளிக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now