Asparagus Benefits In Tamil | Thaneervittan Kilangu Benefits in Tamil
Asparagus Uses in Tamil: இந்த பதிவில் தண்ணீர்விட்டான் கிழங்கு மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். தண்ணீர்விட்டான் கிழங்கு என்பது சர்வரோக நிவாரணி மூலிகை ஆகும். நம் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை சரி செய்து, உடலை வலுப்படுத்தும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்கில் உள்ளது.
பெண்களுக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு ஒரு வரப்பிரசாத மூலிகை ஆகும். தண்ணீர்விட்டான் கிழங்குக்கு நீலாவரிக்கிழங்கு என்ற பெயரும் உண்டு. மலைப்பகுதியில் அதிகம் காணப்படும், நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். சரி இந்த அற்புதமான மூலிகை செடியின் மருத்துவ பயன்களை இப்போது நாம் படித்தறிவோம் வாங்க.
உடல் எடை வேகமாக அதிகரிக்க – Udal Edai Athikarikka SUPER TIPS..! |
தண்ணீர் விட்டான் கிழங்கு நன்மைகள்:
இந்த தண்ணீர்விட்டான் கிழங்கை தண்ணீர் அல்லது பால் விட்டு அரைத்து காயவைத்து பொடி செய்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும்.
இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு பொடியினை பாலில் கலந்து தினமும் அருந்தி வர உடல் உஷ்ணம் குணமாகும்.
அதேபோல் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை மற்றும் வெட்டைச் சூடு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
பூனைக்காலி விதை, நெருஞ்சில், அமுக்கரா, தண்ணீர்விட்டான் கிழங்கு, சாலாமிசரி – தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து தினமும் பாலில் கலந்து குடித்தால் ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
இத்தனை இருக்குதா ஆவாரம் பூவில்..? அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்..! |
ஆண்மையை அதிகரிக்க செய்யும்:
இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது.
எனவே இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு (asparagus uses in tamil) பொடியை பாலில் கலந்து தொடர்ந்து அருந்தி வர தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும், உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும், உடலைப் பலமாக்கும், ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.
உடல் பலம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்து கொள்ள வேண்டும்.
இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வர உடல் பலம் பெரும்.
ஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்து, இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு பொடியினை வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள் என்று, ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதினால் ஆண்மை குறைவு சரியாகும்.
பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.
உடலுக்கு வலிமையை தரும் பயிறு வகைகள்..! |
கால் எரிச்சல்:
கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.
பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும்.
ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.
இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்.
தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50 கிராம், ஆகியவற்றை எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாகும்.
தண்ணீர் விட்டான் கிழங்கு தீமைகள்:

தண்ணீர் விட்டான் கிழங்கை பல நன்மைகளுக்காக எடுத்து கொண்டாலும் அதனால் பல தீமைகளும் ஏற்படுகிறது. அதனால் அதனின் தீமைகளை அறிந்து கொண்டு சாப்பிடுவது நல்லது.
இந்த கிழங்கை அதிகமாக எடுத்து கொள்வது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
சில நபர்களுக்கு இந்த கிழங்கை சாப்பிடுவதால் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தும்.
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைகளுக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அப்போது நீங்கள் இந்த கிழங்கை சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு பி [ அக்கா விளைவை ஏற்படுத்தலாம்.
கர்ப்பிணி பெண்கள் இந்த கிழங்கை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்களும் தண்ணீர் விட்டான் கிழங்கை சாப்பிடுவதற்கு மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |