உடலுக்கு வலிமை தரும் பயிறு வகைகள்
உடலுக்கு வலிமை தரும் உணவுகள் உடலை வலிமைபடுத்த அதிகம் பயிறு வகைகள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். புரதச்சத்து பயிறு வகையில் அதிகம் உள்ளதால் அசைவத்திற்கு நிகரானது பயிர். பொதுவாக பயிறு வகைகள் முத்திய நிலையில் தான் சாப்பிட வேண்டும், அப்போதுதான் அவற்றில் அனைத்து சத்துக்களும் இருக்கும். விதைப் பருவத்தில் பயிர் வகைகளை சாப்பிட்டால் குறைந்த சத்துக்கள் தான் இருக்கும். பயிரில் வைட்டமின் பி, இரும்பு சத்து, ரிபோஃபிளேவிக் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடலுக்கு அதிகம் ஊட்டசத்தை வழங்குகிறது.குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், பாலுட்டும் தாய்மார்கள், வயதானவர்கள் என்று அனைவருக்கும் பயிறு வகைகள் அவசியம் தேவை. அதே போன்று பயிர் வகைகளை அதிகமாக சாப்பிடுவது நல்லது அல்ல. அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வகை பயிரை 50 கிராம் எடுத்துக்கொள்ளலாம். சரி வாங்க என்னென்ன பயிர் வகைகளை உணவில் சேர்த்து வந்தால் உடல் வலிமை அடையும் என்று இப்போது நாம் காண்போம்.
வெந்தியம் ஒரு ஸ்பூன் போதும் 3 கிலோ வரை தொப்பை குறைய..!
பச்சை பயிறு நன்மைகள் :-
உடலுக்கு வலிமை தரும் உணவுகள் பச்சைப் பயிர் எலும்பு வளர்ச்சிக்கு, ரத்தம் ஓட்டத்திற்கு, குழந்தைகள் வளர்ச்சி குறைப்பட்டிற்கு, தசைகளை வலுவாக்குவதற்கு உதவுகிறது.
மாவுச் சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், நார்சத்து, தாமிரம், சோடியம் ஆகியவை ஒரளவு இருக்கின்றன. ஆகையால் இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
பாசி பயறு பயன்கள் |
கொண்டை கடலை:
உடலுக்கு வலிமை தரும் உணவுகள் ரத்த நாளத்தில் உள்ள கொழுப்பு படிவத்தை தடுக்கும். வயிற்றில் உள்ள நோய்களை தடுக்கும் தன்மை வாய்ந்தது. இதில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷயம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாதம் ஆகியவை இதில் உள்ளது. இவற்றில் கொழுப்பு சத்து ஒரளவும் கோலின், பீட்டா கரோட்டின் ஆகியவை சிறிதளவும் இருக்கின்றது. வெள்ளை நிறம் கொண்டைக் கடலையை காட்டிலும் கருப்பு நிறக் கொண்டைக் கடலையில் நார்சத்து அதிகம் உள்ளது. சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் கொண்டைக் கடலை சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் அதிகமாக கொண்டைக் கடலை சாப்பிட வேண்டும்.
காலை எழுந்தவுடன் இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்..!
வெள்ளை மொச்சை பயன்கள் :-
உடலுக்கு வலிமை தரும் உணவுகள் வெள்ளை மொச்சை பயன்கள் உள்ளது. அதாவது இந்த வெள்ளை மொச்சை சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலைப் போக்கும் தன்மை வாய்ந்தது. வெள்ளை மொச்சை பயன்கள் இவற்றில் புரதம், மாவுச் சத்து, கோலின், பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றது மற்றும் இரும்புச் சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் பி, நார்சத்து ஒரளவு இருக்கிறது. சிலருக்கு மொச்சை பயிர் சாப்பிட்டால், வாயுப் பிரச்சனைகளை உண்டாக்கி விடும், ஆகையால் அந்த பிரச்சனைகள் உள்ளவர் மொச்சை பயிர் சாப்பிட வேண்டம். வெள்ளை மொச்சை பயன்கள் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள். கர்ப்பிணிகள், குழந்தைகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாம்.
காராமணி – பயறு வகைகள்:
உடலுக்கு வலிமை தரும் உணவுகள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை வாய்ந்தது. வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை வாய்ந்தது. தென் மாவட்டத்தில் இதனை தட்டை பயிர் என்று சொல்வார்கள். இவற்றில் புரதம், கலோரி, மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாஷியம், ஃபோலிக் ஆசிட், கோலின் ஆகியவை மிக அதிகமாக உள்ளது. தாமிரம், மெக்னிஷியம், துத்தநாகம் ஆகியவை ஒரளவு உள்ளது.
எச்சரிக்கை:
உடலுக்கு வலிமை தரும் உணவுகள் ஜீரண குறைப்பாடு, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள், சில பயிறு வகைகள் குறைவான அளவில் சாப்பிட வேண்டும். பயிர் வகைகளை சாப்பிடுவதன் காரணமாக மூட்டு வலி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு வயிற்றுபோக்கு ஏற்படலாம். முளைக்கட்டிய பயிர்களை மிதமான வெண்ணீரில் வேகவைத்து சாப்பிடுவது நல்லது பயிர் வகைகளில் அதிகம் நார்சத்து இருப்பதால் சாப்பிட்ட உடன் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அனைவருக்கும் பயனுள்ள கை வைத்தியம்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> | Whatsapp Group Link. |