ஆவாரம் பூ பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Avaram poo Health Benefits

Aavaram poo benefits in tamil

ஆவாரம் பூ (Avaram poo Health Benefits in Tamil) என்றால் கடவுளுக்கு பூஜைக்கு படைக்கும் பூவாக தான் நாம் பெரும்பாலும் பார்த்திருப்போம். ஆவாரம்பூவை பெண்கள் விரும்பி தலையில் சூடுவதும் இல்லை.

ஆனால், இயற்கையாக இதை பூவாக கண்டாலும், இது ஒரு மூலிகை மருத்துவ குணம் கொண்டுள்ள ஓர் அருமருந்து என்று தான் கூற வேண்டும்.

தலை முடி வளருவதில் இருந்தும் நீரழிவு நோய், மாதவிடாய் கோளாறுகள் என பல ஆரோக்கிய நன்மைகள் பெற ஆவாரம்பூ(aavaram poo benefits in tamil) உதவுகிறது.

சரி இப்போது அற்புதம் நிறைந்த இந்த ஆவாரம் பூ (avarampoo benefits) மருத்துவ குறிப்பை பற்றி படித்தறிவோம் வாங்க..!

இயற்கை தந்த கடுக்காய் (Kadukkai) – மருத்துவ குணங்கள்..!

ஆவாரம் பூ பயன்கள்..!Avarampoo Payangal..!

காய்ச்சலை குணப்படுத்தும் ஆவாரம் பூ(aavaram poo benefits in tamil):

உடலில் காய்ச்சல் ஏற்படுவது ஏதாவது நுண்ணுயிரி தொற்றுக்களின் மூலமே வருகிறது. நமது உடலில் எப்படிப்பட்ட காய்ச்சல் இருந்தாலும் ஆவாரம் பூவினை போட்டு வேகவைத்த நீரில் காய்ச்சல் நேரத்தில் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உடல் காய்ச்சல் விரைவில் நீங்கிவிடும்.

கூந்தல் நன்கு வளர ஆவாரம் பூ பயன்கள்:

ஆவாரம்பூ பயன்கள் (Avarampoo Health Benefits in Tamil) 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம்.

ஆவாரம் பூவின் (avarampoo benefits) பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?

முடி உதிர்வு பிரச்சனைக்கு – avarampoo benefits tamil:

avarampoo powder benefits in tamil – வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் நம்மை தாக்காது.

கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் இந்த ஆவாரம் பூ.

எனவே முடி உதிர்வு பிரச்சனை கூந்தலில் ஆவாரம் பூவை வைத்து கொண்டால் உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனை, உடனே சரியாகும்.

கூந்தல் நன்கு வளர ஆவாரம் பூ:

benefit in avaram poo in tamil: ஃப்ரெஷ் ஆவாரம் பூ , செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள்.

உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.

பல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் மற்றும் அதன் பயன்கள்..!

தலை முடி பளபளக்க:

ஆவாரம் பூ பயன்கள் – ஒரு பிடி ஆவாரம் பூவை (aavarampoo benefits in tamil) தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள்.

தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி மினுமினுப்பாகவும், பளபளப்பாகும்.

உஷ்ணத்தினால் ஏற்படும் கண் நோய்களுக்கு:

ஆவாரம் பூக்களை (avarampoo benefits) வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும்.

ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

மூலம் குணமாக – aavaram poo uses in tamil:

ஆவாரம் பூ (avarampoo benefits), கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

உடல் வலிமை பெற:

ஆவாரம் பூ பயன்கள் (avaram flower benefits in tamil), அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.

ஆவாரம்பூ உடலுக்கு அளிக்கும் அற்புத நன்மைகள்:

aavaram poo vin payangal – ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும். தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். அதீத தாகத்தை போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.

மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலிக்கு ஆவாரம் பூ சிறந்த தீர்வினை வழங்குகிறது:

Avarampoo Health Benefits in Tamil: அசோகமட்டை, மருதம்பட்டை, ஆவாரம் பூ , திரிகடுகு பொடி, திரிபலா பொடி அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து மாதவிடாய் நாட்களில் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி உடனே சரியாகிவிடும்.

குப்பைமேனி பலவித பிரச்னைகளுக்கு இயற்கை தந்த வரம்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil