அதிமதுரத்தால் ஏற்படும் தீமைகள் என்ன?

athimathuram side effects in tamil

அதிமதுரம் தீமைகள் என்ன? | Athimathuram Side Effects in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் ஆரோக்கியம் பதிவில் அதிமதுரத்தின் நன்மைகள் பற்றி பார்த்திருப்போம். இன்று அதிமதுரத்தின் தீமைகளும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி பார்க்கப்போகிறோம். வாங்க அதனால் என்னென்ன பக்கவிளைவுகள் வருகிறது என்பதை பார்ப்போம்.

அதிமதுரம் ஒரு மருத்துவ குணமிக்க மூலிகை என்பது எல்லோருக்கும் தெரியும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நன்மை உண்டாகும் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதிமதுரத்தில் தீமை இருக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரியவில்லை. அதனால் என்னென்ன பக்கவிளைவுகள் உண்டாகும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.

நம் அன்றாட வாழ்வில் அதிமதுரம் ஒரு முக்கியமான மூலிகையாக கருதப்படுகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் அதிமதுரம் ஒரு இன்றியமையாத பொருளாக திகழ்ந்து வருகிறது. அதிமதுரத்தை ஆங்கிலத்தில் “லிகோரைஸ்” என்று கூறுகிறார்கள். அதிமதுரம் அதிக நறுமணக்காரணிகளை  கொண்டுள்ளது. அதிமதுரம் சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பானது.

பல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் பயன்கள்

அதிமதுரம் சாப்பிடும் அளவு:

athimathuram side effects in tamil

இந்த அதிமதுரத்தில் லிகோரைஸ் என்ற வேதிப்பொருள் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த லிகோரைசை  பயன்படுத்தி தயாரிக்கக் கூடிய உணவு பொருட்கள் ஏராளமாக உள்ளன. இதுபோன்ற உணவுகளை நாம் அதிகமாக சாப்பிடுவதால் நமது உடம்பிலுள்ள “கிலைஸரிசிக்” வேதிப்பொருள் அதிகமாக சுரக்கிறது. இந்த “கிலைஸரிசிக்” அமிலம் நம்முடைய உடம்பில் அதிகமாக சுரப்பதினால் “கார்டிசால்” எனப்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக உற்பத்தியாகிறது என்று ஆராய்ச்சியில் கூறுகிறார்கள். இதனால் நமது உடம்பில் உள்ள தாதுப்புகளில் உள்ள அளவுகளில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இதனால் தான் அதிமதுரத்தை அளவோடு உட்கொள்ளவேண்டும் என்று கூறுகிறார்கள்.

அதிமதுரம் தீமைகள்:

athimathuram side effects

  • உடம்பில் உள்ள பொட்டாசியத்தின் அளவுகள் குறைகிறது.
  • இதனால் தலைவலி உண்டாகும் என்று ஆய்வில் கூறப்படுகிறது.
  • உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
  • இதயம் சம்பந்தமான உபாதைகள், இதயத் துடிப்பில் மாற்றம் அல்லது இதயம் செயலிழப்பு ஏற்படலாம்.
  • சிறுநீரகத்தில் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • மாதவிடாய் வராமல் போகலாம்.
  • உடம்பில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வீக்கம் ஏற்படலாம். தசை சுருக்கம் உண்டாகும்.
  • இதனால் உடலில் சோர்வு ஏற்படும்.
  • சிலருக்கு சுவாச பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது.
  • இதனால் உடல் உறுப்புகள் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் அதிமதுரத்தால் செய்யக்கூடிய உணவுகளை தவிர்ப்பது நல்லது. இதனால் நுரையீரலில் அதிகப்படியான திரவம் தேங்கி விடுகிறது.
சித்தரத்தை மருத்துவ பயன்கள்

கர்ப்பிணி பெண்கள்  ஏன் அதிமதுர பொருட்களை சாப்பிடக்கூடாது:

கருவுற்ற பெண்கள் இந்த அதிமதுரத்தை கொண்டு தயாரித்த உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி குறையும் என்று ஆராய்ச்சியில் கூறுகிறார்கள்.

அதிமதுரம் சாப்பிடும் முறை:

  • இந்த அதிமதுரத்தை வாய்வழியாக 1-4 கிராம் ஒரு நாளைக்கு மூன்று எடுக்கலாம்.
  • அதிமதுர பொடியை 1-4 கிராம் தூள் எடுத்து 150 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து விடவும். பிறகு இதை வடிகட்டி குடிக்கவும்.
  • மாத்திரையாக எடுப்பதாக இருந்தால் 760-1520 மைரோ கிராம் வாய்வழியாக உணவுக்கு முன் சேர்த்து எடுக்கலாம்.
  • இதை 8 முதல் 16 வாரங்கள் வரை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது  நல்லது.
  • குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி கொடுக்கவேண்டாம்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil Maruthuvam Tips