மோர் குடித்தல்
ஒரு வருடத்தில் பொதுவாக நிறைய காலநிலை மாற்றங்கள் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் மற்ற காலநிலை மாற்றங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கோடை காலம் மிகவும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் அதனை நம்மால் தாங்கி கொள்ள முடிவில்லை. அத்தகைய கோடை காலம் வந்தால் மோர் குடித்தல், இளநீர் குடித்தல் மற்றும் வெள்ளரிக்காய் சாப்பிடுதல் போன்றவற்றை செய்கிறோம். அதுமட்டும் இல்லாமல் நம் வீட்டில் உள்ளவர்களும் நம்மை தினமும் மோர் குடிக்க சொல்வார்கள். ஆகையால் ஏன் நாம் தினமும் கோடை காலத்தில் மோர் குடிக்க வேண்டும் தெரியுமா..? அதற்கான பதிலை பதிவை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
கோடைக்காலத்தில் நாம் தினமும் மோர் குடிப்பதன் காரணமாக நமது உடலுக்கு தேவையான ஆற்றல்கள் கிடைத்து உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும் மாற்றங்கள் என்ன அந்த மாற்றங்களில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நெஞ்சு எரிச்சல் குணமாக:
தினமும் நாம் சாப்பிடும் உணவுகளில் நிறைய வகைகள் இருக்கும். அதுபோல ஒரு சில உணவுகளில் காரம் மற்றும் எண்ணெய் அதிகமாக இருக்கும். இதுபோன்ற உணவுகளை நாம் சாப்பிடும் போது நெஞ்சு எரிச்சல் பிரச்சனை வரும். ஆகையால் நாம் மோர் குடிக்கும் போது மோரில் உள்ள லாக்டிக் அமிலமானது நெஞ்சு எரிச்சல் சரி ஆகிவிடும்.
உடல் வெப்பத்தை குறைக்க:
நம்முடைய உடலானது சாதாரணமான நாட்களில் கூட அதிக வெப்பத்துடன் காணப்படும். அதுவும் கோடைக்காலத்தில் அதிகமாக இருக்கும். அதனால் கோடைக்காலத்தில் தினமும் மோர் குடித்தால் உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக வைக்க உதவும்.
இரத்த அழுத்தம் குறைய:
பொதுவாக எல்லோருக்கும் இரத்த அழுத்தம் உள்ளது. இந்த இரத்த அழுத்தத்தினை குறைப்பதற்கு நாம் தினமும் மோர் குடித்தால் போதும். அதனால் தினமும் 1 டம்ளர் மோர் குடிக்க வேண்டும்.
பீட்ரூட் ஜூஸின் பயன்கள் |
சருமம் பளபளப்பாக இருக்க:
தினமும் மோர் குடிப்பதால்முகத்தில் உள்ள எண்ணெய் பசை மற்றும் கிருமி நாசினிகளை நீக்கி முகத்தை இயற்கையாக பளபளக்க செய்யும். அதுமட்டும் இல்லாமல் கோடைக்காலத்தில் வரும் பருக்களையும் மறைய செய்கிறது.
உடல் ஆற்றல் அதிகரிக்க:
நம்முடைய உடலில் வெளிப்படும் வியர்வை காரணமாக எலக்ட்ரோ லைட்டுகள் இழக்க நேரிடும். அதுவும் கோடைக்காலத்தில் வியர்வை அதிகாமாக இருக்கும். ஆகையால் தினமும் கோடைக்காலத்தில் மோர் குடித்தால் இழந்த எலக்ட்ரோ லைட்டுகளை மீண்டும் பெற செய்து உடலை நன்றாக இயங்க வைத்திருக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |