Benefits of Drinking Papaya Juice Daily
பழங்கள் மற்றும் காய்கறிகளில் தான் அதிகமான சத்துக்கள் இருப்பதால் அதனை தான் நம்முடைய வீட்டில் அதிகமாக உண்ணச் சொல்வார்கள். அதிலும் எல்லாம் பழமும் மற்றும் காயும் பிடிக்குமா என்றால் அது தான் கிடையாது. நம்மிடம் ஒரு பழக்கம் இருக்கும். அது என்னவென்றால் ஊட்டச்சத்து அதிகமாக உள்ள பழமோ அல்லது காயோ சாப்பிடுவதற்கு பதிலாக ஊட்டச்சத்து குறைவாக உள்ளனவற்றையை தான் விரும்பி சாப்பிடும். இவ்வாறு இருக்கையில் நாம் சில நேரத்தில் பழத்தினை ஜூஸ் போல செய்து குடிப்போம். அத்தகைய ஜூஸ் வகைகளில் பப்பாளி ஜூஸும் ஒன்றும். ஆகையால் இன்றைய பதில் தினமும் பப்பாளி ஜூஸ் குடிப்பதனால் நம்முடைய உடலில் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
தினமும் பப்பாளி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:
பப்பாளி ஜூஸில் வைட்டமின் C சத்தானது அதிக அளவில் உள்ளது. இதனை ஜூஸினை நாம் தினமும் குடிப்பதனால் நம்முடைய உடலுக்கு தேவையான வைட்டமின் C சத்து கிடைத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்து ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.
மேலும் இதில் உள்ள வைட்டமின் C சத்து நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தினை போக்கி மகிழ்ச்சியாக வாழச் செய்கிறது.
மாதவிடாய் வலி குறைய:
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியினை குறைப்பதற்கு இந்த பப்பாளி ஜூஸ் ஆனது சிறந்த ஒன்றாக உள்ளது. பப்பாளி ஆனது பெண்களின் கருவினை கலைக்கக்கூடிய தன்மையினை பெற்றிருந்தாலும் கூட அதனை ஜூஸ் ஆகா செய்து குடித்தால் அந்த ஜூஸில் உள்ள நொதித்தல் பண்பானது மாதவிடாய் காலத்தில் வரும் வலியினை விரைவில் போக செய்கிறது.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடலாமா… சாப்பிட கூடாதா… |
உடல் பருமன் குறைய:
பப்பாளி ஜூஸில் நார்ச்சத்து அதிக அளவு இருக்கிறது. அதனால் இந்த பப்பாளி ஜூஸினை தினமும் நாம் குடித்து வருவதனால் நம்முடைய உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் குறைந்து உடல் எடையினை வேகமாக குறைக்க வழிவகுக்கிறது.
புற்றுநோய் வராமல் தடுக்க:
தினமும் பப்பாளி ஜூஸ் குடிப்பதால் ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயினையும், பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோயினை வராமல் தடுக்க செய்கிறது. ஏனென்றால் பப்பாளி ஜூஸில் பிளவனாய்டுகள், ஆன்டி ஆக்ஸைடுகள் புற்றுநோய் உருவாகும் செல்களை அழிக்க செய்கிறது.
சருமத்திற்கு:
இத்தகைய ஜூஸில் வைட்டமின் A மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் இதனை நாம் நம்முடைய முகத்திற்கு அப்ளை செய்வது மூலம் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அழித்து தேவையான ஈர்ப்பத்தினை அழித்து பளிச்சென்று பிரகாசமாக இருக்க உதவுகிறது.
இதையும் படியுங்கள்👇👇
கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |