Benefits of Eating Green Onions in Tamil
இந்த ஒரு பொருள் இல்லையென்றால் நாம் சமைக்கும் சமையல் அவ்வளவு நன்றாக இருக்காது. அது என்ன பொருள் என்றால் வெங்காயம் தான். இந்த வெங்காயம் இல்லாமல் அதிகளவு குழம்புகள் வைக்க முடியாது. முக்கியமாக இந்த சின்ன வெங்காயமானது பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது..!
அதுவும் வெறும் வாயில் பச்சையாக சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம் வாங்க..!
சின்ன வெங்காயம் பச்சையாக சாப்பிடலாமா..?
சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம். அதுவும் தினமும் வெங்காயத்தை மென்று முழுங்கவேண்டும். தினமும் உண்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை நெருங்காது. அதேபோல் தினமும் உணவுக்கு சின்ன வெங்காயத்தை சேர்ப்பதன் மூலம் உடலுக்கு அதிகளவு நன்மைகளை அளிக்கிறது.
சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள்:
பச்சை வெங்காயத்தில் கலோரிகள் மிகக் குறைவு, 3.5 அவுன்ஸ் (100 கிராம்) ஒன்றுக்கு 40 கலோரிகள் மட்டுமே உள்ளது.
- கலோரிகள்: 40
- நீர்: 89%
- புரதம்: 1.1 கிராம்
- கார்போஹைட்ரேட்டுகள்: 9.3 கிராம்
- சர்க்கரை: 4.2 கிராம்
- ஃபைபர்: 1.7 கிராம்
- கொழுப்பு: 0.1 கிராம்
வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..!
வெங்காயத்தை பச்சையாக மென்று சாப்பிடுவதால் சிறுநீர் நன்கு வெளியாகும்.
உடல் சூட்டை குறைக்கும். அதேபோல் வெங்காயத்தில் கொஞ்ச நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து வருவதால் இரத்த சோகை குறையும்.
நீர் கடுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் சில நிமிடங்களில் நீர் கடுப்பு நீங்கும்.
இந்த வெயில் காலத்தில் சிலருக்கு உடலில் கட்டிகள் ஏற்படும். இதற்கு நாம் சின்ன வெங்காயத்தை நசுக்கி சாறை அப்படியே கட்டிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரையில் குணமாகும். ஆகவே பச்சையாகவும் சரி, உணவிலும் சரி இந்த சின்ன வெங்காயத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.
வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Udal edai athikarikka tips |