செவ்வாழை பழம் எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா.?
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் செவ்வாழை எப்பொழுது சாப்பிட வேண்டும் அப்படி சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம். பழம் என்றாலே மிகவும் பிடிக்கும். அதிலும் எல்லா காலங்களிலும் கிடைக்க கூடியது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளது. அதில் ஒன்று தான் செவ்வாழைப்பழம். இந்த பழத்தில் தான் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. முக்கியமாக செவ்வாழையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.
இதையும் படியுங்கள் ⇒ தினமும் 02 வாழைப்பழம் சாப்பிட்டால்..! என்ன நன்மைகள் தருகிறது தெரியுமா?
செவ்வாழை பழம் சாப்பிடுவதற்கு உகந்த நேரம்:
பெரும்பாலானவர்கள் சாப்பிட்ட பிறகு தான் பழங்களை எடுத்து கொள்வார்கள். ஆனால் இது போல் சாப்பிடுவது சரியான முறை அல்ல. செவ்வாழை சாப்பிடுவதற்கு சரியான நேரம் காலை 6 மணிக்கு எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் காலை 11 மணி மற்றும் மாலை 4 மணிக்கு எடுத்துக்கொள்ளலாம். உணவுக்கு பிறகு வாழைப்பழம் எடுத்து கொண்டால் உடலை சோர்வடைய செய்யும். அதுமட்டுமில்லாமல் செரிமானம் ஆகுவது கஷ்டமாக இருக்கும். அதனால் உணவுக்கு பின் அதுவும் இரவு நேரத்தில் வாழைப்பழம் எடுத்து கொள்வதை தவிர்த்து விடுங்கள். செவ்வாழை பழத்திற்கு மட்டுமில்லை எல்லா வகையான வாழைப்பழத்தையும் மேல் கூறப்பட்டுள்ள நேரத்தில் தான் சாப்பிட வேண்டும்.
நரம்பு தளர்ச்சி பிரச்சனைக்கு தீர்வு:
நரம்பு தளர்ச்சி பிரச்சனை ஏற்பட்டால் உடலில் உள்ள சக்திகள் குறைந்துவிடும். நரம்பு தளர்ச்சி பிரச்சனை வந்தாலே ஆண்மை குறைபாடு பிரச்சனையும் ஏற்படும். அதனால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரவு 1 செவ்வாழை பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நரம்புகள் சக்தி பெரும்.
மாலைக்கண் நோய்:
மாலைக்கண் நோய்க்கு சிறந்த மருந்து செவ்வாழை பழம். கண் பார்வை குறைய ஆரம்பித்ததும் தினமும் செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பிரச்சனை சரி ஆகிவிடும்.
மலச்சிக்கல் உடனடி தீர்வு:
மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வு செவ்வாழை பழம். காலையில் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் குடலை சுத்தப்படுத்தி மலத்தை வெளியேற்றும்.
பல் ஆட்டம் நிற்க:
பல் வலி மற்றும் பல் ஆடுவது போன்ற பல் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது செவ்வாழை பழம் தான். செவ்வாழை பழத்தை தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் பற்கள் பலமாகும்.
சரும பிரச்சனை:
சரும பிரச்சனைகளான சொறி சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக இருப்பது செவ்வாழை பழம். செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் சரும பிரச்சனைகள் குணமாகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |