இரத்த வாந்தி வருவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் | Blood Vomiting Reason Tamil

இரத்த வாந்தி காரணம் தமிழ் | Blood Vomit Reason Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய ஆரோக்கியம் பகுதியில் இரத்த வாந்தி வருவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் தொற்று இருந்தால் முதலில் வாந்தி, மயக்கம், தலைவலி போன்றவை தான் வரும். இவற்றில் நாம் முதலில் கவனிக்க வேண்டியது வாந்தி தான், ஒரு சிலருக்கு தொற்று இருக்கும் போது இரத்தம் கலந்த வாந்தி வெளிப்படும். இந்த இரத்த வாந்தி எதனால் வருகிறது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம், அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் இரத்த வாந்தி வருவதற்கான காரணங்கள் மற்றும் முதலுதவியை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இரத்த வாந்தி காரணம் தமிழ்: 

Blood Vomit Reason Tamil

 • Blood Vomit Reason in Tamil: சைனஸ் பிரச்சனை, உணவுக்குழாயில் புண் மற்றும் எரிச்சல் இருந்தால் இரத்த வாந்தி ஏற்படும்.
 • அல்சர், இரைப்பை அழற்சி, இரத்த சோகை, ஆஸ்பிரின் மற்றும் நாம் எடுத்து கொள்ளும் மருந்து, மாத்திரையாக கூட இருக்கலாம்.
 • மது பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு கல்லீரலில் சிரோசிஸ் உருவாகியிருக்கும், அப்படிப்பட்டவர்களுக்கு இரத்த வாந்தி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • புற்றுநோய், உணவுக்குழாய், கணையம் மற்றும் வயிற்றில் புண் இருந்தாலோ இரத்தம் கலந்த வாந்தி வெளிப்படும்.
இரத்த அழுத்தம் குறைய பாட்டி வைத்தியம்

இரத்த வாந்தி அறிகுறிகள் – Blood Vomit Symptoms Tamil:

இரத்த வாந்தி காரணம் தமிழ்

 1. தலைச்சுற்றல்
 2. மங்கலான பார்வை
 3. மூச்சு விடுவதில் சிரமம்
 4. இதயத்துடிப்பு சீராக இல்லாமல் இருப்பது
 5. மயக்கம்
 6. தலைவலி
 7. உடல் குளிர்ச்சியாக இருப்பது
 8. வயிற்று வலி போன்றவை இரத்தம் வாந்தி வருவதற்கான அறிகுறிகள் ஆகும். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரிடம் உங்களுக்கு எந்த நிறத்தில் வாந்தி வெளிப்பட்டது என்பதை தெளிவாக கூற வேண்டும்.

இரத்த வாந்தி முதலுதவி – Blood Vomiting Treatment Tamil:

இரத்த வாந்தி முதலுதவி

 • இரத்தம் கலந்த வாந்தி வெளிப்பட்டவுடன் நோயாளியை தரையில் படுக்க வைத்து, அவரின் கால்கள் சற்று உயரமான இடத்தில் இருக்க வேண்டும்.
 • உடல் சற்று குளிர்ச்சியாக இருக்கும் அதனால் அவர்களை கதகதப்பான சூழ்நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.
 • எந்த உணவையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டாம், வாயை மட்டும் நீரினால் கழுவி கொள்ளவும்.
 • நோயாளிக்கு மயக்கம் ஏற்பட்டால் உடனே மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் அதனை சரி செய்வதற்கு உடனே நோயாளியை ஒரு பக்கமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும்.
இரத்த சோகை அறிகுறிகள் மற்றும் காரணங்கள்

 

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், உடல் நல ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்–>ஆரோக்கியமும் நல்வாழ்வும்