மூச்சுப் பயிற்சி செய்வது எப்படி? | Breathing Exercise Benefits in Tamil | Moochu Payirchi
பொதுவாக மூச்சுப் பயிற்சி என்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பயிற்சி ஆகும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி நமது உடல் முழுவதும் புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆகவே மாணவ செல்வங்கள், சுறுசுறுப்பாக இருப்பவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருமே தினமும் காலை எழுந்ததும் பற்களை துலைக்கிவிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்திவிட்டு வெறும் வயிற்றில் மூச்சுப் பயிற்சி செய்து வரலாம். இருப்பினும் இதய நோயாளிகள், இதயம் சம்மந்தமாக அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் இந்த பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சரி இப்பொழுது உடல் நலத்தை பேணிக்காக்கும் சில வகையான மூச்சுப் பயிற்சி செய்யும் முறை மற்றும் மூச்சுப் பயிற்சியின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
கபாலபாதி மூச்சுப் பயிற்சி செய்யும் முறை | மூச்சு பயிற்சி செய்வது எப்படி.?
நமது உடலில் ஏற்படும் எல்லாவிதமான நோய்களுக்கு மிகவும் முக்கிய காரணம் கழிவுகள் சரியாக வெளியேறாதது முதல் காரணம். காலை நாம் எழுத்தவுடனே நமது உடல் இயக்கம் மற்றும் மனதுஇயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நமது உடலில் இருக்க வேண்டிய கழிவுகள் வெளியேற வேண்டும். ஆகவே தினமும் இந்த கபாலபாதி பயிற்சியை செய்து வந்தால் நம் வயிற்றில் உள்ள சிறுகுடல் மற்றும் பெருங்குடல் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்யும்.
யோகா வகைகள் மற்றும் பயன்கள்..! |
செய்யும் முறை:
- ஏதாவது ஒரு உட்கார்ந்திருக்கும் நிலையில் அல்லது பத்மாசனத்தில் அமர்ந்து பயிற்சியை செய்யலாம்.
- எந்த பயிற்சிகளையும் செய்யும் போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்வது நல்லது. தலை, கழுத்து, முதுகு ஆகியவற்றை நேராக வைக்க வேண்டும்.
- மூச்சை வேகமாக வெளியே விடவும். அடிவயிற்றின் அடிபாகம் லேசாக அசையட்டும்.
- மூக்கு நுனியின் மீது எண்ணத்தைச் செலுத்துங்கள். சிறிது சிறிதாக மூச்சு இழுத்தும், அவைகளைத் தொடர்ந்து சிறிது சிறிது மூச்சு வெளி விடுவதும் செய்ய வேண்டும்.
- ஆரம்பத்தில் ஒரு நொடிக்கு ஒரு முறை மூச்சு இழுப்பதும் வெளி விடுதலும் வேண்டும். இவ்வாறு காலையிலும் மாலையிலும் மூன்று சுற்றுகள் செய்யலாம்.
மூச்சு பயிற்சி எப்போது செய்ய வேண்டும்.?
மூச்சு பயிற்சி காலை, உச்சி வேளை, மாலை வேளையில் செய்யலாம்.
மூச்சு பயிற்சி பயன்கள் | Moochu Payirchi Nanmaigal:
இப்பயிற்சி மண்டையோடு, சுவாச அமைப்பு, நாசித் துவாரம் ஆகியவைகளை சுத்தமாக்குகிறது. சைனஸ் நோய்களைக் குணமாக்குகிறது. சுவாச குழாய்களிலுள்ள சளியைப் போக்குகிறது. இதனால் ஆஸ்துமா குணமாகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த மூச்சு பயிற்சி ஆகும்.
நாடி சுத்தி செய்முறை:-
நாடி சுத்தி பயிற்சியனை காலை, மதியம், மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்ய வேண்டும். தரையில் ஒரு விரிப்பு விரித்து அதில் அமர்ந்து முதுகெலும்பு நேராக வைத்து செய்ய வேண்டும். வயதானவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
இடது கை சின்முத்திரையில் இருக்க வேண்டும். (பெருவிரல், ஆள்காட்டி விரல் நுனியை இணைத்து மற்ற விரல்கள் தரையை நோக்கியிருக்கவும்)
வலது கை பெருவிரலால் வலது மூக்கை அடைத்து இடது மூக்கில் மிக மெதுவாக மூச்சை உள் இழுத்து, மிக மெதுவாக இடது மூக்கிலேயே மூச்சை வெளிவிடவும். மீண்டும் இடது மூக்கிலேயே மூச்சை இழுத்து மிக மெதுவாக இடது மூக்கிலேயே வெளியிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும். (மூச்சு இழுக்கும் பொழுது வயிறு வெளியில் வர வேண்டும். மூச்சு விடும் பொழுது வயிறு உள்ளே மெதுவாக செல்ல வேண்டும்).
இப்பொழுது வலது கை மோதிர விரலால் இடது மூக்கை அடைத்து வலது மூக்கிலேயே மெதுவாக மூச்சை இழுத்து வலது மூக்கிலேயே மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும்.
மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய யோகாசனம்..! |
இப்பொழுது வலது மூக்கின் பெருவிரலால் அடைத்து இடது மூக்கில் மெதுவாக மூச்சை இழுத்து உடன் இடது மூக்கை மோதிர விரலால் அடைத்து வலது மூக்கால் மெதுவாக மூச்சை வெளியிடவும். மீண்டும் இடதில் இழுத்து வலது மூக்கில் மூச்சை வெளியிடவும். இதேபோல் பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.
இப்பொழுது மோதிர விரலால் இடது மூக்கை அடைத்து வலது மூக்கால் மெதுவாக மூச்சை இழுத்து உடன் வலது மூக்கால் பெருவிரலால் அடைத்து இடது மூக்கில் மூச்சை மெதுவாக வெளியிடவும். இதே போல் பத்து முறைகள் செய்யவும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |