மூச்சு விடும் போது வலிக்குதா? அதுக்கு என்ன காரணம்?

மூச்சுக்குழாய் அழற்சி

மூச்சு விடும் போது வலிக்குதா? என்ன காரணம்?

மூச்சுக்குழாயின் சுவற்றில் அழற்சி அல்லது தொற்றுகள் காரணமாக தடித்துக் காணப்படும் ஒரு நாட்பட்ட பாதிப்பு மூச்சுக்குழாய் அழற்சி எனப்படும்.. இந்த மூச்சுக்குழாய் அழற்சி பாதிப்பு உள்ளவர்கள், அடிக்கடி அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவில் மூச்சு விட சிரமம் படுவார்கள். ஒரு சுவாசமண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மூச்சுக்குழாயில் ஒரு மீளமுடியாத சேதம் ஏற்படும்போது இந்த நிலை உண்டாகிறது. இந்த பாதிப்பைக் கொண்ட நபர்களுக்கு தொடர்ந்து இருமல் ஏற்படுவதும் சளி வெளியேறுவதில் சிரமம் இருப்பதும் தொடரும்.

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS

 

இப்போது மூச்சு விடும் போது வலி எதனால் ஏற்படுகின்றது, அதன் அறிகுறிகள் மற்றும் சரி செய்வது எப்படி என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

மூச்சுக்குழாய் அழற்சி..!

மூச்சுக்குழாய் அழற்சி என்பது ஏதேனும் ஒரு மருத்துவ பாதிப்பு காரணமாக அல்லது நுரையீரலில் உண்டாகும் தொற்று பாதிப்பால் உண்டான சேதங்களின் (அதாவது சளி வெளியேற இயலாமைக்கு வாய்ப்பாக இருக்கும்) இதன் விளைவாக உண்டாகும் பாதிப்பாக இருக்கலாம்.

நுரையீரலில் சளி சேரும்போது மேலும் தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படலாம். பொதுவாக 60 வயதைக் கடந்த பெண்களுக்கு இந்த பாதிப்பு உண்டாகலாம்.

ஆனால் எந்த வயதிலும் இந்த பாதிப்பு ஏற்படலாம். இந்த நிலை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

மூச்சுக்குழாய் அழற்சி என்றால் என்ன?

மூச்சுக்குழாய் அழற்சி என்பது ஒரு தீவிர உடல் பாதிப்பாகும். சரியான சிகிச்சை எடுக்க முடியாதபட்சத்தில் சுவாச மண்டல செயலிழப்பு அல்லது இதய செயலிழப்பு போன்ற தீவிர பாதிப்பு உண்டாகலாம். இருப்பினும், முன்கூட்டியே இந்த நோயைக் கண்டறிவதால், இந்த பாதிப்பு மோசமடையாமல் தடுக்க முடியும்.

அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?

எப்படி இந்த பாதிப்பை தெரிந்து கொள்வது? 

சேதமடைந்த மூச்சுக்குழாய் வழியாக காற்று நுழைவதால் கிருமிகள் மற்றும் சளி போன்றவை நுரையீரலில் சேரத் துவங்குகிறது.

இதன் காரணமாக அடிக்கடி தொற்று பாதிப்பு மற்றும் காற்றுப்பாதையில் தடை போன்றவை ஏற்படுகிறது. இந்த நிலைக்கு எந்த ஒரு தீர்வும் இல்லாமல் இருந்தாலும், இதனை நிர்வகிக்க முடியும்.

இந்த அடைப்பை விரைந்து நிர்வகித்து சிறந்த முறையில் உடலுக்கு ஆக்சிஜென் பரவுவதை செயல்படுத்த வேண்டும்.

காரணங்கள் (Bronchiectasis Causes):-

நுரையீரல் தொடர்பான எந்த ஒரு காரணமும், மூச்சுக்குழாய் அழற்சிக்கு வழி வகுக்கும். இவற்றில் இரண்டு நிலைகள் உள்ளன அவை என்னென்ன என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்துகொள்வோம் வாங்க.

1. சிஸ்டிக் பைப்ரோசிஸ் மூச்சுக்குழாய் அழற்சி:-

இது சிஸ்டிக் பைப்ரோசிஸ் என்ற பாதிப்புடன் தொடர்புடைய நிலையாகும். இது ஒரு அசாதாரண சளி உற்பத்தியை உண்டாக்கும் ஒரு மரபணு சார்ந்த நிலையாகும்.

சிஸ்டிக் பைப்ரோசிஸ், நுரையீரலை பாதிக்கும்போது, தொடர்ச்சியான தொற்று பாதிப்பு ஏற்படுகிறது, இதன் காரணமாக மற்ற உறுப்புகளும் பாதிக்கலாம். இதன் காரணமாக உடல் செயல்பாடுகள் மோசமடையலாம்.

2. சிஸ்டிக் பைப்ரோசிஸ் அல்லாத மூச்சுக்குழாய் அழற்சி:-

இது சிஸ்டிக் பைப்ரோசிஸ் பாதிப்புடன் தொடர்பு கொண்டதல்ல. சிஸ்டிக் பைப்ரோசிஸ் அல்லாத மூச்சுக்குழாய் அழற்சி ஏற்பட சில பொதுவான காரணிகள் உள்ளன.

அவை தன்னுணர்வு நோய், அசாதாரணமாக செயல்படும் நோயெதிர்ப்பு மண்டலம், குடல் அழற்சி நோய், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய்கள், எச் ஐ வி. ஒவ்வாமைக் கொண்ட ஒரு வகை காளான் நோய், கக்குவான் இருமல், காசநோய்.

அறிகுறிகள் (Bronchiectasis Symptoms):-

மூச்சுக் குழாய் அழற்சிக்கான பொதுவான அறிகுறிகள் அழற்சி அதிகரிக்கும்போது மூச்சுத்திணறல் அதிகரிக்கும், மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் சளி இருமல், மிகவும் சோர்வாக உணர்தல், காய்ச்சல் அல்லது குளிர், மூச்சுத்திணறல், இரத்த இருமல், மார்பு வலி, எடை இழப்பு, அடிக்கடி சுவாச நோய்த்தொற்றுகள் ஆகிய அறிகுறிகள் இருக்கும்.

சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்