Cauliflower or Broccoli Which is Better in Tamil
தினமும் நாம் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்தும் பொருட்களில் காய்கறி முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் நிறைய வகையான காய்கறிகள் சாப்பிட்டு இருப்போம். ஆனால் அதில் எது நமக்கு சிறந்தது என்று பலரும் நினைத்து இருப்பார்கள். அதனால் இன்றைய பதிவில் காலிபிளவர் Vs ப்ரோக்கோலி இந்த இரண்டில் எது உடலுக்கு ஆரோக்கியமானது மற்றும் இதற்கு இடையேயான வேறுபாடு என்ன என்பது பற்றியும் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ பாகற்காயை சாப்பிடுவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
உடல் ஆரோக்கியத்திற்கு காலிபிளவர் Vs ப்ரோக்கோலி எது நல்லது..?
நாம் சாப்பிடும் காலிபிளவர் Vs ப்ரோக்கோலி இந்த இரண்டுமே பார்ப்பதற்கு வெளித்தோற்றத்தில் ஒரு மாதிரியாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இந்த இரண்டு காய்களும் பிராசிகேசியே என்ற ஒரே இனத்தை சேர்ந்தவையாகும்.
இந்த காய்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் அதிலுள்ள சத்துக்கள் சிறிதளவு வேறுபட்டு காணப்படுகின்றன. அதுபோல இதனை சமைக்கும் விதமும் வெவ்வேறு வகையில் இருக்கின்றன.
காலிபிளவர் Vs ப்ரோக்கோலி இரண்டு காய்களும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்களை அழித்தல் மற்றும் புற்றுநோய் வராமல் பாதுகாத்தல் போன்ற எண்ணற்ற நன்மைகளை தருகிறது.
ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு ப்ரோக்கோலி தான் சிறந்தது என்று மருத்துவரின் ஆலோசனை படி சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ உடல் ஆரோக்கியத்திற்கு வெல்லம் நல்லதா..? சர்க்கரை நல்லதா..?
காலிபிளவர் Vs ப்ரோக்கோலி வேறுபாடு:
காலிபிளவர் |
ப்ரோக்கோலி |
இதில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் அதிக அளவு மாங்கனீசு இருக்கிறது. | அதிக அளவு கலோரிகள் மற்றும் போலேட் இருக்கிறது. |
இதில் வைட்டமின் C, வைட்டமின் K ஆகிய இரண்டு சத்துக்கள் மட்டுமே இருக்கின்றன. | இதில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K ஆகிய மூன்று சத்துக்கள் இருக்கின்றன. |
தினசரி மனித உடலுக்கு தேவையான கால்சியம் 2% மட்டுமே இருக்கிறது. | இதில் தினசரி மனித உடலுக்கு தேவையான கால்சியம் 4% இருக்கிறது. |
காலிபிளவர் Vs ப்ரோக்கோலி சத்துக்கள்:
1 கப் காலிபிளவரின் சத்துக்கள் | 1 கப் ப்ரோக்கோலியின் சத்துக்கள் |
புரதச்சத்து 2 கிராம் | புரதச்சத்து 2.5 கிராம் |
நார்ச்சத்து 2 கிராம் | நார்ச்சத்து 2.5 கிராம் |
கார்ப்ஸ் 5.5 கிராம் | கார்ப்ஸ் 6 கிராம் |
வைட்டமின் C 57% (DV) | வைட்டமின் C 90% (DV) |
வைட்டமின் B6 12% (DV) | வைட்டமின் B6 9% (DV) |
வைட்டமின் K 14% (DV) | வைட்டமின் K 77% (DV) |
பொட்டாசியம் 7% (DV) | பொட்டாசியம் 6% (DV) |
செம்பு 5% (DV) | செம்பு 5% (DV) |
போலேட் 15% (DV) | போலேட் 14% (DV) |
மாங்கனீசு 7% (DV) | மாங்கனீசு 8% (DV) |
பாஸ்பரஸ் 4% (DV) | பாஸ்பரஸ் 5% (DV) |
தியாமின் 5% (DV) | தியாமின் 5% (DV) |
நியாசின் 3% (DV) | நியாசின் 4% (DV) |
காலிபிளவர் Vs ப்ரோக்கோலி இந்த இரண்டு காய்களில் சத்துக்களில் வேறுபாடு இருந்தாலும் ஊட்டச்சத்திற்கு ப்ரோக்கோலி தான் சிறந்தது என்று மருத்துவரின் ஆலோசனைப்படி சொல்லப்படுகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |