வயசானாலும் இளமையாகவே இருக்க கொலாஜன் உணவுகள் | Collagen Rich Foods in Tamil

collagen benefits in tamil

கொலாஜன் உணவுகள் | Collagen Benefits in Tamil

பொதுவாக அனைவருக்குமே இருக்கின்ற ஆசைகளில் ஒன்று எப்பொழுதுமே நாம  இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை தான். இதற்காக பலர் அவர்களது லைஃப்ஸ்டைலில் பலவகையான விஷயங்களை பின்பற்றுவாங்க. அதாவது ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவார்கள். இருப்பினும் அதற்கு உங்கள் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை தேர்ந்தெடுப்பது அவசியம். ஆம் நீங்கள் கொலாஜன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் இளமை பாதுகாக்கப்படும். உங்களுக்கு கொலாஜன் நிறைந்த உணவுகள் எது என்று தெரியவில்லை.. அப்படி என்றால் உங்களுக்கு இந்த பதிவு உதவி செய்யும். அதாவது இங்கு கொலாஜன் நிறைந்த உணவுகளை பட்டியலிட்டுளோம், உங்கள் இளமையை பாதுகாக்க வேண்டும் என்றால் இந்த பதவி முழுமையாக படித்து. உங்கள் உணவு முறையில் கொலாஜன் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள். சரி வாங்க கொலாஜன் அதிகரிக்க எது மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

Collagen Rich Foods in Tamil

பொதுவாக கொலாஜன் என்பது நமது உடலில் உருவாக்கக்கூடிய ஒரு இயற்கையான புரோட்டீன் ஆகும், இந்த கொலாஜன் நமது சருமம் மற்றும் தசை, தசைகளின் நார்களை உருவாக்கக்கூடிய கட்டுமானத்திற்கு பெரும் பங்காக இருக்கிறது. மேலும் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவிபுரிகிறது. இத்தகைய கொலாஜன் உற்பத்தியானது நமக்கு வயதாகும் போது அதுவாகவே குறைய ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக தான் நமக்கு சரும சுருக்கம், புள்ளிகள், சருமத்தில் கோடுகள் போன்றவை வர ஆரம்பிக்கிறது. ஆகவே நாம் இந்த கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க சில உணவு முறைகளை கடைபிடித்து இளமையாக மீண்டும் பெறலாம். அத்தகைய உணவுகளை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

ஆட்டுக்கால் சூப்:

பொதுவாக எலும்பு குழம்புகளில் அதிகளவு புரோட்டின் அதிகமாக உள்ளது. ஆகவே நீங்கள் வாரத்தில் ஒரு முறை ஆட்டுக்கால் சூப் செய்து குடித்தீர்கள் இந்த உலும்பு குழம்பு உங்க உணவில் அதிக புரதத்தை சேர்க்க உதவி செய்யும். இதன் மூலம் உங்களது உடலில் கொலாஜன் அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆகவே உங்கள் இளமையும் பாதுகாக்கப்படும்.

Bok choy கீரை:

Collagen Benefits in Tamil – இந்த Bok choy கீரையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் A, C,K, B1, B2, B3, மற்றும் B6 நிறைந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், ஜிங்க் போன்ற பலவகையான ஊட்டச்சத்துக்களை கொண்ட கீரையாகும். குறிப்பாக இந்த Bok choy கீரையை நாம் எடுத்து கொள்வதினால் நமது இளமையை நாம் எப்பொழுது பாதுகாக்க முடியும். ஏனென்றால் Bok choy கீரையில் நமது உடலில் கொலாஜனை அதிகரிக்கும் பண்புகள் அதிகமாக உள்ளது.

பரட்டைக்கீரை – கேல் கீரை – kale:

இந்த கேல் கீரையும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட கீரை வகை ஆகும். இந்த கீரையை நமது உணவு முறையில் சேர்த்து கொள்வதன் மூலம் நாம் என்று இளமையான தோற்றத்தில் இருக்க முடியும். ஏன் என்றால் இந்த கேல் கீரையில் நமது உடலில் கொலாஜன் சத்துக்களை அதிகரிக்கும் பண்புகளை கொண்டதாகும். மேலும் இந்த பரட்டைக்கீரையில் நார்ச்சத்தும், இரும்பு சத்து, துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, ஈ, கே, பி6 நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள காரோட்டினாய்டுகள், ஃபிளேவனாய்டுகள் போன்றவை புற்றுநோயையையும் திசு சேதம் அடைவதையும் தள்ளிப் போடுகின்றன.

பசலைக்கீரை:

பசலைக்கீரை

பசலைக்கீரையில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பலவாகியன் ஆரோக்கிய பிரச்சனைக்கும் சிறந்த தீர்வினை தருகிறது. குறிப்பாக நமது இளமையை அதிகரிக்க உதவும் உணவாகவும் செயல்படுகிறது. ஆகவே உங்கள் உணவில் பசலைக்கீரையை அதிகளவு சேர்த்து கொள்ளுங்கள். மேலும் கீரைகளில் கிடைக்கும் சத்துகள் வேறெந்த உணவு பொருட்களிலும் கிடைப்பதில்லை. அதனால் எல்லா வகையான கீரைகளையும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதன் மூலம் நமது இளமையை பெறலாம்.

காளான் – Mushrooms:

Collagen Benefits in Tamil – காளான் உணவில் அதிகளவு ஆண்டி-ஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன. குறிப்பாக இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. நமது இளமையை பாதுகாக்கும் உணவுகளில் ஒன்றாகவும் காளான் இருக்கிறது. ஆகவே இளமையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க நினைப்பவர்கள் காளானை உங்கள் உணவு முறையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பாதாம்:

Collagen Benefits in Tamil – பொதுவாக நட்ஸ் வகைகளில் புரதம் சத்து அதிகம் நிறைந்துள்ளது என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆகவே நாம் நட்ஸ் வகைகளை நமது உணவுகளில் சேர்த்து கொள்வதன் மூலம் நமது உடலில் புரதம் சத்துக்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும். இதன் மூலம் நமது உடலில் கொலாஜன் பண்புகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆக நாம் நமது இளமையை நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் எளிதாக பாதுகாத்திட முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் இளமையை மீட்டுத்தரும் அவகோடா பழத்தின் நன்மைகள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்