நாட்டுக்கோழி vs பிராய்லர் கோழி எது நல்லது?

Advertisement

Country Chicken vs Broiler Chicken Which is Better in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. பெருபாலும் அசைவ பிரியவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். இந்த சிக்கனில் இரண்டு வகைகள் உள்ளது நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி என்று இரண்டு வகைகள் உள்ளன. இருப்பினும் நமது மக்களுக்கு நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி இவற்றில் எது உடலுக்கு நல்லது என்று தெரிவதில்லை. அவற்றை தெரியப்படுத்துவதற்காகவே இந்த பதிவு. ஆம் நண்பர்களே இந்த பதிவில் நாட்டுக்கோழி vs பிராய்லர் கோழி எது நல்லது? என்பதை பற்றி தான் பதிவு செய்துள்ளோம். ஆகவே இந்த பயனுள்ள தகவலை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்..

நாட்டுக்கோழி vs பிராய்லர் கோழி எது நல்லது?

நாட்டுக்கோழி:

வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் பொதுவாக கம்பு, சோளம், அரிசி மற்றும் விவசாய நிலங்களில் இருக்கும் புழு பூச்சிகளை தனக்குக் கிடைத்த அனைத்தையும் உண்ணும். அதேசமயம் அவற்றுக்குச் சமச்சீர் தீவனங்கள் அளிப்பதன் மூலம்தான் அனைத்துச் சத்துகளும் கிடைக்கும்.

நாட்டுக்கோழிகளை 12 வாரங்கள் வளர்த்தப் பின்பே இறைச்சிக்காக அனுப்ப முடியும். முட்டைக்காக வளர்த்தால் 20 வாரங்கள் முதல் 72 வாரங்கள் வரைக்கும் காத்திருக்க வேண்டும். இந்த இடைவெளியில் நாட்டுக்கோழிகள் சுமார் 80 முதல் 150 வரையிலான முட்டைகளைத் தரும்

பிராய்லர் கோழி:

வெய்ட் லாக் என்று அழைக்கப்படும் பிராய்லர் கோழி எப்படி வளர்கிறது என்று தெரியுமா? குடோனுக்குள் சூரிய ஒளியே இல்லாமல், ஒரு கூண்டுக்குள் வளர்க்கப்பட்டு. குறைந்த நாட்களிலேயே வேகமாக வளர வேண்டும் என்பதற்காக. அந்த கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படுகிறது. அப்படி வளர்க்கப்படும் கோழியை தான் நாம் இப்பொழுது அதிகம் விரும்பி சாப்பிடுகிறோம். நாட்டுக்கோழியில் இருக்கும் எந்த ஒரு சத்துக்களும் இந்த பிராய்லர் கோளில் துளிகூட கிடையாது. பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுபவை. பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது கிடையாது என்று அனைத்து மக்களுக்கும் தெரியும் ஆனாலும் இன்றளவுகூட அதிக அளவு விரும்பி சாப்பிடும் உணவாக இருப்பது பிராய்லர் சிக்கன் தான்.

பிராய்லர் கோழிகளை 35 முதல் 38 நாட்களிலேயே இறைச்சிகளுக்காக அனுப்பிவிடுவார்கள். அப்போதே ஒன்றரை முதல் இரண்டு கிலோ வரை எடை இருக்கும். முட்டைக்கோழிகளைப் பொறுத்தவரை 20 முதல் 72-வது வார இடைவெளிகளில் முட்டைகளை இடும். இந்தக் காலகட்டத்தில் மட்டுமே சுமார் 320 முதல் 330 வரையிலான முட்டைகள் கிடைக்கும். 72 வாரங்களுக்கு பின்பு தான் இந்த முட்டைக்கோழிகளை இறைச்சிக்காக அனுப்புவார்கள்.

பிராய்லர் கோழி சாப்பிடுவது நல்லதா?

பொதுவாக இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் இந்த கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படுகிறது. ஆகவே மனிதர்களாகிய நாம் அதனை அதிகளவு சாப்பிட்டதால் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை கட்டாயம் சந்திக்க வேண்டியதாக இருக்கும். குறிப்பாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆகவே பிராய்லர் கோழியை முற்றிலும் தவிர்த்துக்கொண்டு, நாட்டுக்கோழி சாப்பிடுவது சிறந்தது.

100 கிராம் நாட்டுக்கோழியில் 4 கிராம் கொழுப்பு தான் உள்ளது. ஆனால் பிராய்லர் கோழியில் 23 கிராம் கொழுப்பு உள்ளது.

அதேபோல் 100 கிராம் நாட்டுக்கோழியில் 21 கிராம் புரதம் உள்ளது. ஆனால் பிராய்லர் கோழியில் 16 கிராம் தான் புரதம் உள்ளது. ஆகவே கொழுப்பு சத்து குறைந்த மற்றும் புரதம் சத்து அதிகமுள்ள நாட்டுக்கோழியை சாப்பிடுவதே மிகவும் சிறந்தது நன்றி வணக்கம்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil
Advertisement