Daily Eating Chicken Side Effects
பொதுவாக நாம் சாப்பிடும் உணவு முறைகளை பார்த்தால் ஒன்று சைவம் மற்றொன்று அசைவம் என இரண்டு வகையாக இருக்கிறது. ஆனால் இதில் இரண்டையும் நாம் பார்க்கும் போதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக அசைவ சாப்பாட்டினை சாப்பிட தான் விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக பார்த்தால் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம் மெய் மறந்து சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் சிலர் தினமும் சிக்கன் இருந்தால் தான் சாப்பாடு உள்ளே இறங்கும் என்றும் சொல்லுவார்கள். ஆனால் இதுமாதிரி நாம் தினமும் தொடர்ந்து சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி யோசிப்பதும் இல்லை மற்றும் அதனை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமும் இல்லை. ஆகவே இன்று தினமும் தொடர்ந்து சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்று இந்த பதிவை விரிவாக தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
எலும்பு பிரச்சனை:
நமது உடலில் எலும்பு ஆரோக்கியமாகவும் மற்றும் அதிக வலிமையுடனும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு கால்சியம் மற்றும் வைட்டமின் சத்து மிகவும் அவசியம். இத்தகைய எலும்புகளில் எலும்பினை வலிமையாக வைக்கவும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கும் பணியினை புரதம் செய்கிறது.
ஆகவே கோழி கறியினை நாம் தினமும் சாப்பிடும் போது அதில் உள்ள புரதம் நமது எலும்பிற்கு தேவையில்லாத கெட்ட புரதத்தை அளித்து எலும்பு பிரச்சனையை உருவாக்கும்.
உடல் எடை அதிகரிப்பது:
சிக்கனில் அதிக கலோரி மற்றும் அதிகமான கொழுப்பு சத்துக்கள் இருக்கிறது. அதனால் இதனை நாம் தினமும் தொடர்ந்து சாப்பிடுவதால் நமது உடலின் எடையை மிகவும் வேகமாக அதிகரிக்க செய்யும். இதுவும் சிக்கன் நாம் தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஒன்றாகும்.
தினமும் அவித்த முட்டை சாப்பிடலாமா.! அப்படி சாப்பிட்டால் உடல் என்ன ஆகும் தெரியுமா ..! |
இதய ஆரோக்கியம்:
கோழிக்கறியினை நாம் எண்ணெயில் வறுத்து, கிரேவி மற்றும் சிக்கன் 65 போன்ற முறைகளில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கோழியில் இயலாகவே கொழுப்பு சத்து உள்ளது. அதனை மீண்டும் நாம் எண்ணையில் பொரித்து நாம் சாப்பிடுவதன் மூலம் நம்முடைய இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
உடல் வெப்பம் அதிகரிக்க:
நாம் சாப்பிடும் மற்ற உணவுகளில் இல்லாத அதிகமான வெப்பம் கோழிக்கறியில் இருக்கிறது. ஆகையால் நாம் எப்போதாவது ஒருநாள் கோழிக்கறி சாப்பிட்டால் அது உடலிற்கு அதிகப்படியான வெப்பத்தை அளிக்காது. அப்படி இல்லாமல் தினமும் நாம் கோழிக்கறி எடுத்துக்கொண்டால் நமது உடலின் வெப்பத்தை அதிகரிக்க செய்த மூக்கில் இரத்தம் வரும் வாய்ப்பு இருக்கிறது.
பெருங்குடல் புற்றுநோய்:
நமது உடலில் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கு தினமும் நாம் சாப்பிடும் உணவுகளும் ஒரு காரணம் ஆகும். ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவில் யுனைடெட் ஸ்டேட்ஸிஸ் என்ற பொருளானது பெருங்குடல் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக அமைகிறது. இத்தகைய மூலப்பொருளானது கோழிக்கறியில் இருக்கிறது. அதனால் கோழிக்கறியினை தினமும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
ஆகவே எந்த உணவாக இருந்தாலும் அதனை நாம் அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதனால் உடலுக்கு தீமை விளைவிக்கக்கூடியதாக மாறிவிடும். அதனால் தினமும் கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்த்த எப்போதாவது ஒரு முறை சாப்பிடுவது நல்லது.
இதையும் படியுங்கள்⇒ நீங்கள் பிராய்லர் கோழி சாப்பிடுபவர்களா.! அப்போ அது நல்லதா.! கெட்டதா.!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |