பிஸ்கட் தீமைகள்
வணக்கம் நண்பர்களே.! காலையில் எழுந்ததும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டீ, காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஏனென்றால் டீ, காபி குடித்தால் தான் அன்றைய பொழுது சுறுசுறுப்பாக இருக்கும் என்று குடிப்பார்கள். இன்னும் சில நபர்கள் டீ, காபியுடன் பிஸ்கட், ரஸ்க், வடை, பஜ்ஜி, மிச்சர் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவார்கள். இது போல் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா..? என்று தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் டீ, காபியுடன் பிஸ்கட் நனைத்து சாப்பிடுவதுக்கு ஆரோக்கியமானதா என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
டீ, காபியுடன் பிஸ்கட் நனைத்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. எப்பொழுதாவது பிஸ்கட் சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே நீங்கள் தினமும் எடுத்து கொண்டால் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அது என்னென்ன பிரச்சனைகள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.!இதையும் படியுங்கள் ⇒ டீயுடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள்…!
உடல் பருமன் அதிகரிக்க:
பிஸ்கட்டில் ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகள் அதிகம் உள்ளது. மேலும் பிஸ்கட்டில் கொழுப்புகள் இல்லாததால் உடல் எடையை அதிகரிக்கும். மேலும் தோல் அலர்ஜி, முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இரத்த சர்க்கரை அளவு :
டீ, காபியுடன் இனிப்பு நிறைந்த பிஸ்கட்டை சேர்த்து சாப்பிடும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகள் பிஸ்கட் சாப்பிடும் போது சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். அதனால் சர்க்கரை நோயாளிகள் பிஸ்கட் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
நோயெதிர்ப்பு குறைபாடு:
பிஸ்கட்டில் அதிகமாக சர்க்கரை இருப்பதால் நோய்யெதிர்ப்பு சக்தியை குறைக்க செய்யும்.
மலசிக்கல் பிரச்சனை:
பிஸ்கட் மாவில் தயாரிப்பதால் அதில் நார்ச்சத்துக்கள் கிடையாது. அதனால் நம் உடலில் மலசிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
பல் சொத்தை காரணம்:
பிஸ்கட்டில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் தினமும் சாப்பிட்டு வந்தால் பற்களில் பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் பற்களில் சிறிய ஓட்டைகளாக உருவெடுத்து சொத்தைகளாக மாறிவிடும்.
இதையும் படியுங்கள் ⇒ தினமும் 2 க்கு மேல் டீ, காபி குடிப்பவரா நீங்கள் உங்களுக்கு ஆயுள் கெட்டி என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |