டீ காபி நன்மைகள்
நண்பர்களே இன்றைய பதிவானது டீ, காபி குடிப்பவர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். காரணம் அதிகளவு மதுவுக்கு அடிமையாவது போல் சிலர் டீ, காபி இரண்டுக்கும் அடிமையாக இருப்பார்கள். தினமும் அளவுக்கு அதிகமாக டீ காபி குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படும் அதனை அதிகம் குடிக்க கூடாது என்று நிறைய பேர் நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டு தினமும் பயமுறுத்தி வருகிறார்கள் அதனால் டீ காபி பிடித்தவர்கள் அதனை குடிப்பதை நிறுத்தாமல் பயந்து சிலர் டீ, காபி குடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். பாவம்..! இனி அதனை பற்றிய கவலை வேண்டாம் பிரிட்டனின் நடத்திய ஆய்வில் நமக்கு பயன் அளிக்கும் விதத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி கவலை இல்லாமல் டீ காபி குடிக்கலாம்.
டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
டீ காபி சொன்னவுடன் ஒரு புத்துணர்ச்சி வரும் அதேபோல் காலையில் எழுந்தவுடன் மற்ற வேலைகளை எதனையும் செய்யாமல் நம்முடைய பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே செய்வது டீ, காபி குடிப்பது தான் முதல் வேலையாக செய்கிறார்கள். இந்தியா மட்டுமில்லாமல் தற்போது வெளிநாடுகளிலும் இதனுடைய தாக்கமானது அதிகமாகிவிட்டது. ஆகையால் உலகம் முழுவதுமே டீ, காபி என பல்லாயிரம் கணக்கானோர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.
பிரிட்டனின் நாட்டில் தேசிய புற்றுநோய் நிறுவனம் நடத்திய ஆய்வில் 2 அல்லது அதற்கு மேல் டீ காபி குடிப்பவர்களுக்கு டீ, காபி குடிக்காதவர்களை விட அதிக ஆயுளை கொண்டு இருப்பார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில் சுமார் 5 லட்சம் நபர்கள் கலந்துகொண்டனர் இந்த ஆய்வில் 40 முதல் 69 வயதுடைய நபர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் கருப்பு தேநீர் குடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை இந்த சுமார் 11 ஆண்டுகள் நடத்தப்பட்டது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |