முள்ளங்கி சாப்பிடும் போது இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடவேக்கூடாது…!

Advertisement

முள்ளங்கியுடன் சாப்பிட கூடாதவை | முள்ளங்கி எதிர் உணவுகள்

வணக்கம் நண்பர்களே..! நாம் சாப்பிடும் உணவுகளில் காய்கறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அப்படி நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். அத்தகைய காய்கறி வகைகளில் முள்ளங்கியும் ஒன்று. முள்ளங்கியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இந்த முள்ளங்கியில் வைட்டமின் A, C, B, புரதம், கால்சியம், இரும்பு சத்து இதுபோன்ற நிறைய தாதுக்கள் நிறைந்து இருக்கின்றன.

காய்கறி வகைகளில் அதிக வைட்டமின் C  நிறைந்து சத்து இந்த முள்ளங்கியில் தான் இருக்கிறது. அதாவது  100 கிராம் முள்ளங்கியில் 17 கலோரி, 2 கிராம் நார்சத்து, 15 மில்லி கிராம் வைட்டமின் C, 35 மில்லி கிராம் கால்சியம், 22 மில்லி கிராம் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்து  இருக்கின்றன. இத்தகைய முள்ளங்கியை நாம் அளவோடு சாப்பிட வேண்டும். அதுமட்டும் இல்லாமல் முள்ளங்கி சாப்பிடும்போது சில உணவுகள் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது என்னென்ன உணவுகள் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ இந்த 7 உணவுகளை மறந்தும் சாப்பிடாதீர்கள்..!

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்:

எந்த உணவையும் அளவோடு சாப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக மாறிவிடும். முள்ளங்கி சாப்பிடும் போது சில உணவுகள் அதனுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது என்னென்ன உணவுகள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • வெள்ளரிக்காய் 
  • பால் 
  • ஆரஞ்சு 
  • பாகற்காய் 
  • தேநீர் 
  • நீங்கள் முள்ளங்கி சாப்பிடும் போது வெள்ளரிக்காய் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் வெள்ளரிக்காயில் வைட்டமின் C-யை உறிஞ்சும் அஸ்கார்பேட் இருக்கிறது. அதனால் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • முள்ளங்கி உடலுக்கு வெப்பத்தை தரக்கூடியது அப்படி இருக்கும் போது முள்ளங்கியுடன் பால் சேர்த்து குடிக்க கூடாது. ஒரு வேளை நீங்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், வயிறு வலி இது போன்ற பிரச்சனைகள் வரும்.
  • ஆரஞ்சு பழம் சாப்பிடும் போது அதனுடன் முள்ளங்கி சேர்த்து சாப்பிட்டால் அது  உங்களுடைய உடலை மிகவும் பாதிக்கிறது. அதாவது வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் உங்களுக்கு உடல் நலக்குறைப்பாடு இருந்து கெண்டே இருக்கும். அதனால் இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது.
  • முள்ளங்கி மற்றும் பாகற்காய் இந்த இரண்டு காய்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிட கூடாது. ஏனென்றால் இந்த இரண்டு காய்கறியையும் ஒன்றாக சாப்பிடும் போது உடலில் சுவாச பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டும் இல்லாமல் இயதயத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்காது.
  • முள்ளங்கியுடன் தேநீர் சேர்த்து குடிக்க கூடாது. இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடும்போது உடலுக்கு எதிர் மாற்றத்தை விளைவிக்கும். அதனால் மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகையால் இந்த இரண்டு உணவுகளையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
தப்பி தவறிகூட இந்த உணவை இரவில் சாப்பிட்டுவிடாதீர்கள்..?

முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியவர்கள் யார் தெரியுமா.?

  • உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை படி தான் முள்ளங்கி சாப்பிட வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement