சாப்பிட்ட உடனே இதை மட்டும் மறந்தும் கூட செய்யாதீர்கள்..!

Advertisement

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் சாப்பிட்ட பின் செய்ய கூடாதவை என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம். சாப்பாடு என்பது நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான ஒன்று. நாம் சாப்பிடும் உணவு நமக்கு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து சாப்பிடுவோம். ஆனால் அப்படி சாப்பிட்டால் மட்டும் போதாது அந்த சாப்பாடு உங்களுடைய உடலில் சேர வேண்டும். அதற்கு நீங்கள் சாப்பிட்டவுடன் குளிக்க கூடாது. எதனால் சாப்பிட்டவுடன் குளிக்க கூடாது என்று தொடரை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ பாலுடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள்..!

தினமும் குளித்தல்:

தினமும் குளித்தல் என்பது நமது உடலை சுறுசுறுப்பாக வைப்பதற்கு உதவுகிறது. ஆனால் அப்படி குளிப்பதிலும் சில விதிமுறைகள் இருக்கின்றன. எப்போதும் சாப்பிட்டிற்கு முன் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். அதுதான் உடலுக்கு நல்லது.

சாப்பிட்டவுடன் குளித்தல்:

நீங்கள் எப்போதும் குளிக்கும் போது உடலில் உள்ள செல்கள் மொத்த ஆற்றலுடன் செயல்படும். அப்படி இருக்கும்போது  நீங்கள் குளித்து முடித்த பிறகு உடனே வயிறு பசிக்க ஆரம்பித்து விடும். அதனால் சாப்பிட்ட பிறகு குளிக்க கூடாது.

சாப்பிட்ட உணவு ஜீரணம் செய்வதற்கு உடலில் நொதிகள் தேவைப்படுகிறது. அந்த நொதிகள் உடல் வெப்பநிலையில் இருக்கும்போது மட்டும் சுரக்கும். சாப்பிட்ட பிறகு குளிப்பதனால் உங்கள் உடல் குளிர்ச்சி அடைந்து விடும். அதனால் அந்த நொதிகள் சுரக்காமல் போகிவிடும். இதனால் சாப்பாடு ஜீரணம் ஆகாது.

அதுபோல சாப்பிட்ட உடனே குளித்தால் மல சிக்கல், செரிமான கோளாறு இதுபோன்ற பிரச்சனைகள் வரும்.

சாப்பிட்ட பின் எவ்வளவு நேரம் களித்து குளிக்கலாம்:

பொதுவாக நீங்கள் எந்த உணவு சாப்பிட்டாலும் குறிப்பாக 1 மணி நேரம் களித்து தான் குளிக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் சாப்பிட்டவுடன் நீச்சல் அடிப்பது இதுபோன்ற செயல்களை செய்யவே கூடாது. ஏனென்றால் நீச்சல் அடிக்கும்போது உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தம் செல்வதால் சாப்பாடு செரிமானம் ஆகாது.

ஆயுர்வேத முறைப்படி குளித்தல்:

பண்டைய கால ஆயுர்வேத முறைப்படி சாப்பாட்டிற்கு பின் 2 மணி நேரம் வேறு எதுவும் சாப்பிடவோ அல்லது குளிக்கவோ கூடாது. ஏனென்றால் சாப்பாடிற்கு பிறகு உங்களுடைய உடலில் தோலில் ஏற்படும் வெப்பமானது செரிமானத்திற்கு உதவுகிறது. அதனால் நீங்கள் சாப்பிட்ட பிறகு எதையும் செய்ய கூடாது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement