இரவு நேரத்தில் இந்த 7 உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்..

Eating these foods at night can affect sleep in tamil

இரவு சாப்பிட கூடாத உணவுகள்

இந்த உலகில் பிறந்த உயிரினங்கள் அனைத்திற்கும் உணவு ரொம்ப முக்கியமானது. அந்த வகையில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உணவு ரொம்ப முக்கியமானது. உணவுகளை சரியான நேரத்திலும், ஆரோக்கியமான உணவுகளாகவும் எடுத்து கொள்ள வேண்டும். சில உணவுகளை இரவு நேரத்தில் எடுத்து கொள்ள கூடாதாம். அப்படி எடுத்து கொண்டால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுமாம். அது என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவின் மூலமாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

இரவில் சாப்பிட கூடாத உணவுகள்: 

 

இரவு நேரங்களில் நாம் எளிதில் செரிமானமாகும் உணவை சாப்பிட்டால் மட்டுமே நமது செரிமான உறுப்புகள் ஆரோக்கியத்துடன் செயல்படும். நாம் எளிதில் செரிமானமாகாத உணவுகளை சாப்பிட்டால் செரிமானகோளாறு, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்

தயிர்:

இரவில் சாப்பிட கூடாத உணவுகள்

தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். இருந்தாலும் இரவில் எடுத்து கொள்ளும் போது செரிமான பிரச்சனை ஏற்படும். மேலும் சளி பிரச்சனையை ஏற்படுத்தும்.

ஏன் கோடை காலத்தில் தினமும் மோர் குடிக்க வேண்டும் தெரியுமா..? தெரியலைனா தெரிஞ்சுக்கோங்க..!

தக்காளி:

இரவில் சாப்பிட கூடாத உணவுகள்

இரவு நேரத்தில் தக்காளி சாப்பிடுவது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இவை டைரமைன் என்ற அமிலம் ஏற்படுகிறது. இதனால் மூளையின் செயல்பாடு அதிகரித்து தூக்கத்தை தாமதப்படுத்துகிறது.

மசாலா உள்ள உணவுகள்:

இரவில் சாப்பிட கூடாத உணவுகள்

மசாலா உணவுகள் சாப்பிடுவதற்கு ருசியாக இருந்தாலும் நமது உடலிற்கு தீங்கை ஏற்படுத்தும். சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் மற்றும் உடல் உஷ்ணத்தை அதிகரித்து இரவில் தூக்கம் வராமல் செய்யும்.

காபி:

இரவில் சாப்பிட கூடாத உணவுகள்

இரவு நேரத்தில் காபி குடிக்க கூடாது. இவற்றில் இருக்க கூடிய கேஃபைன் மூளையின் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை செயல்பட்டு மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. இதனால் தூக்கம் வராது.

குளிர்பானங்கள்:

இரவில் சாப்பிட கூடாத உணவுகள்

குளிர்ச்சியான எந்த உணவையும் இரவில் உன்ன கூடாது. ஐஸ்கிரிம், ஆரஞ்சு, திராட்சை, பழங்கள் போன்றவற்றை சாப்பிட கூடாது.

எண்ணெயில் பொறித்த உணவுகள்:

இரவில் சாப்பிட கூடாத உணவுகள்

எண்ணெயில் பொறித்த உணவுகளை இரவில் சாப்பிடும் போது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கத்திரிக்காய்:

இரவில் சாப்பிட கூடாத உணவுகள்

கத்திரிக்காய் மற்றும் வெள்ளரிக்காய், பிராக்கோலி போன்றவை இரவில் சாப்பிட கூடாது. இவை உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும். இதனால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.

சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்