முட்டை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு..?

Advertisement

முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..!

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நண்பர்களே… தினமும் நம் ஆரோக்கியம் பதிவில் பயனுள்ள தகவல்களை பற்றி அனைவரும் தெரிந்து கொண்டு வருகிறோம். அதுபோல இன்று நாம் முட்டை சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். முட்டை என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு உணவு பொருள். முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுபோல, முட்டை அதிகமாக சாப்பிடுவதால் சில பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம் வாங்க.

முட்டை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

முட்டையின் தீமைகள்

முட்டையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முட்டையை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையில் புரத சத்து அதிகம் உள்ளது. முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு முட்டை தான் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அதேபோல மற்ற எந்த உணவு பொருட்களிலும் இல்லாத கோலைன் என்ற சிறந்த பொருள் முட்டையில் அடங்கியுள்ளது. இவ்வளவு சத்துக்கள் முட்டையில் இருந்தாலும் நாம் அதிகளவு முட்டையை உணவில் சேர்த்து கொள்ளும் போது அது நமது உடலுக்கு பல தீமைகளை தருகிறது. முட்டை அதிகளவில் உணவில் சேர்ப்பதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம்.

முட்டையின் தீமைகள்:

  • 1 முட்டையில் 186 மில்லிகிராம் கொழுப்பு சத்து அடங்கியுள்ளது. நீங்கள் தினமும் அதிகளவு உணவில் முட்டை சேர்த்து சாப்பிட்டால் இந்த கொழுப்புக்கள் கெட்ட  கொழுப்புகளாக மாறி இதய சம்மந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது. அதுபோல இதயநோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
  • நீரிழிவு நோய் பிரச்சனை உள்ளவர்கள் முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம், அதிகளவு முட்டை சாப்பிடுவதால் உயர் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

குறிப்பு: நீரிழிவு நோய் பிரச்சனை உள்ளவர்கள் 3 நாட்களுக்கு 1 முறை முட்டை சாப்பிடலாம்.

  • அதிகமாக முட்டை சாப்பிடுவதால் சிலருக்கு வாயு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிகளவு முட்டை சாப்பிடுவது குடலில் செரிமான அமைப்பில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதனால் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் உருவாக காரணமாகிறது.
  • கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் அதிகளவு முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முட்டையில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால் அது உடலில் மேலும் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
  • அதேபோல், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இரவு நேரங்களில் முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement