Fenugreek Water Benefits in Tamil
இன்றைய ஆன்மிகம் பதிவில் வெறும் வயிற்றில் வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். நம் அன்றாட வாழ்வில் நாம் உண்ணும் உணவுகள் அனைத்துமே பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உணவு பொருட்களில் வெந்தயமும் ஓன்று. வெந்தயம் பல ஆரோக்கிய குணங்களை கொண்டுள்ளது. இது பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அந்த வகையில் வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம் வாங்க..!
வெந்தயம் பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..? |
வெந்தயத்தில் இருக்கும் சத்துக்கள்:
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்கள் இருக்கின்றன. மேலும் இதில் தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
வெந்தயம் ஊறவைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
உடல் வெப்பத்தை தணிக்க:
வெந்தயம் ஊறவைத்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது. இந்த நீரை குடித்து வருவது உடல் வெப்பத்தால் ஏற்படும் அதிகப்படியான வியர்வை, நீரின் அளவு குறைதல், மஞ்சள் காமாலை, நீர்க்கடுப்பு போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்க உதவுகிறது.
வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..! |
முடி அடர்த்தியாக வளர:
உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக சிலருக்கு முடி அதிகமாக கொட்டும். அதனால் வெந்தயம் ஊறவைத்த நீரை தினமும் காலையில் குடித்து வருவதால் இதில் இருக்கும் எண்ணெய் பசை முடி கொட்டும் பிரச்சனையை சரி செய்து முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
இதய நோய்கள் வராமல் தடுக்க:
வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது இதயத்தை பலமாக வைக்க உதவுகிறது. மேலும் இதனால் இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகின்றது. அதனால் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் வெந்தயத்தை தினமும் காலையில் குடித்து வந்தால் நல்ல பலனளிக்கும்.
சர்க்கரை நோய்க்கு மருந்தாக:
வெந்தயத்தில் இருக்கும் கசப்பு தன்மை நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. வெந்தயத்தில் அதிக அளவில் கரையும் நார்ச்சத்து இருப்பதால் இது ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகள் உண்ணும் அளவையும் குறைக்க உதவுகிறது. அதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
தினமும் வெங்காய பச்சடி (ரைத்தா) சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..! |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |