முடி அதிகம் கொட்டுதா..? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!

Foods To Control Hair Fall in Tamil

Foods To Control Hair Fall in Tamil..!

வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய ஆரோக்கியம் பதிவில் முடி உதிர்வை தடுக்கும் உணவுகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். அனைவருக்குமே நீளமான முடி இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு முடி அதிகமாக கொட்டும். முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு எத்தனையோ முறைகளை கையாளுவார்கள்.

அப்படி முடி உதிர்வை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மேலும் முடியை அதிகம் சேதப்படுத்துவார்கள். முடி உதிர்வை தடுக்க முடியை பராமரித்தால் மட்டும் போதாது. சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டும். அதுபோல முடி உதிர்வை தடுக்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா ?

முடி உதிர்வை தடுக்கும் உணவுகள்:

உணவுகள்

முடி உதிர்வு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே ஏற்படக்கூடிய ஒரு விஷயம் தான். இன்றைய கால கட்டத்தில் முடியை பராமரிக்க போதுமான நேரம் கிடைப்பதில்லை. அதுபோல நாம் சரியான உணவுகளை எடுத்து உட்கொள்ளாததாலும் இதுபோன்ற பிரச்சனை ஏற்படுகிறது.

இதனால் முடிக்கு போதுமான சத்துக்கள் கிடைப்பதில்லை. நாம் அன்றாடம் உண்ணும் உணவு பொருட்களில் புரதச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். நாம் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்யலாம். அந்த உணவுகளை இங்கு பார்ப்போம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ முன் நெற்றியில் முடி வளர சில இயற்கை வழிகள்..!

முடி உதிர்வை தடுக்கும் கேரட்:

கேரட்

கேரட் -ல் வைட்டமின் A சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. கேரட்டில் அதிக அளவு பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன. அதனால் இது முடி உதிர்வை தடுத்து முடியை வலிமையாக வைக்க உதவுகிறது. கேரட்டில் உள்ள சத்துக்கள் தலையில் வளர்ச்சியை ஏற்படுத்தும்.

பீன்ஸ் முடி உதிர்வை தடுக்குமா..? 

பீன்ஸ்

பீன்ஸ் பல வகைகளில் உள்ளது. இந்த பீன்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து, வைட்டமின் B மற்றும் வைட்டமின் C, துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் அதிகம் இருப்பதால் இது முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. பீன்ஸ் முடி உதிர்வை தடுப்பது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.

முடி உதிர்வை தடுக்கும் உணவு பொருள் முட்டை:

முட்டை

முட்டையில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது. முட்டையில் புரோட்டீன், வைட்டமின் B12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. முட்டையில் உள்ள சத்துக்கள் முடி உதிர்வை தடுக்க உதவுகிறது.

பசலைக் கீரை முடி உதிர்வை தடுக்கிறது:

பசலைக் கீரை

பசலைக் கீரை அதிக ஊட்டச் சத்துக்களை கொண்டுள்ளது. இதில் இரும்புச்சத்து, வைட்டமின் A மற்றும் வைட்டமின் C, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும், பசலைக் கீரை தலையில் உள்ள எண்ணெய்ச் சுரப்பியைத் தூண்ட செய்கிறது. இது முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்