கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..?

Advertisement

Foods To Eat for A Healthy Liver in Tamil

அன்பு உள்ளம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நம் உடலில் உள்ள மிக பெரிய உறுப்புகளில் ஓன்று தான் கல்லீரல். இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்கிறது. மேலும் கல்லீரல் பல புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் பணியை செய்கிறது. அந்த வகையில் கல்லீரலை பலப்படுத்தும் உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

கல்லீரல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்..!

கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்:

மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நம் உடல் சீராக இயங்குவதற்கு தேவையான செயல்பாடுகளில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது.

கல்லீரலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அது உடலின் பல முக்கிய செயல்பாடுகளை பாதிக்கிறது. கல்லீரல் செயலிழந்தால் பல நோய்கள் நம்மைத் தாக்குகிறது. அதனால் நாம் கல்லீரலை பாதுகாக்க வேண்டும்.

கல்லீரலை பாதுகாக்க சில உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதை பற்றி இங்கு பார்க்கலாம்.

பூண்டு: 

பூண்டு

கல்லீரலை பலப்படுத்தும் உணவுகளில் பூண்டு முதலிடத்தை பிடித்துள்ளது. பூண்டில் செலினியம் என்ற கனிமம் அதிகளவில் காணப்படுகிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்மந்தபட்ட பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.

பூண்டு கல்லீரலை சுத்தப்படுத்தவும் கல்லீரல் நொதிகள் மற்றும் நச்சுகளை அகற்றவும் உதவுகிறது. இதில் அல்லிசின், வைட்டமின் C மற்றும் வைட்டமின் B6 போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதால் இது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

 பீட்ரூட்:

 பீட்ரூட்

நாம் வாரம் 2 முறை பீட்ரூட் சாப்பிட்டு வர வேண்டும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் திறன் பீட்ரூட்டில் அதிகம் காணப்படுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் இரும்புசத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது கல்லீரலை பாதுகாக்கிறது. இது கல்லீரல் சம்மந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தடுக்கிறது.

திராட்சை:

திராட்சை

கல்லீரலை பாதுகாக்கும் பழங்களில் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் வாரம் ஒரு முறையாவது திராட்சை பழம் சாப்பிட்டு வருவதால் கல்லீரல் சம்மந்தபட்ட பாதிப்புகள் வராமல் தடுக்க முடியும். கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் தொற்றுநோயைக் குறைக்க திராட்சை உதவுகிறது.

வாழைப்பழம்:

வாழைப்பழம்

 

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வாழைப்பழம் உதவுகிறது. கல்லீரலில் ஏதும் வீக்கம் ஏற்பட்டால் உணவு விரைவில் செரிமாணம் ஆகாது. அந்த நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை கொடுக்கும். கல்லீரலில் ஏதும் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று வாழைப்பழத்தை உட்கொள்ளலாம்.

காய்கறிகள் மற்றும் கீரை வகைகள்:

காய்கறிகள் மற்றும் கீரை வகைகள்

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இவை இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றன. தினமும் சத்தான காய்கறிகளையும் கீரைகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த 5 ஜூஸ் குடித்தால் போதும் கல்லீரல் சுத்தமாகும்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement